முப்பரிமாணப் படம்(3D Film) கேள்விப் பட்டிருப்பீர்கள். முப்பரிமாண வீடு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகின் முதல் முப்பரிமாண அச்சாக்க முறையில் (3D printing) உலகின் முதல் வீடு நெதர்லாந்தில் கட்டப்பட்டு வருகிறது.முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) என்பது பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிநுட்பம்.
கணினியில் நாம் தட்டச்சு செய்யும் ஆவணங்களை எப்படி அப்படியோ பிரிண்ட் எடுக்கிறோமோ அப்படியே ஒரு வீட்டின் ப்ளானை மென்பொருட்களில் வரைந்து, ஒரு வீட்டையே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். காகிதம், இங்கிற்குப் பதிலாக வீட்டின் மூலப் பொருட்களை இடவேண்டும். https://www.youtube.com/watch?v=b_daGDQ7ZC8 இந்த Youtube முகவரியில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். இந்தத் தொழிநுட்பம் தற்போது வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் முப்பரிமாண வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கட்டுமான தொழிலானது மிகவும் மாசு ஏற்படுத்தும் துறையாக இருந்து வருகிறது. இம்மாதிரியான வீடுகள் கட்டப்படுவது பெருகும் நிலையில் அது குறையும் வாய்ப்பு உள்ளது. முப்பரிமாண அச்சாக்க முறையில் போக்குவரத்து செலவுகளும் குறையும்வாய்ப்பும் உள்ளது. மேலும் எல்லாவித பொருட்களையும் உருக்கிப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மறுசுழற்சியும் செய்யப்படுகிறது. இந்தப் புதிய முறை கட்டுமாணத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். கேமர் மேக்கர் (kamer maker) என்னும் கருவியைத்தான் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். 75% தாவர எண்ணெய் மற்றும் மைக்ரோ ஃபைபர்கள் அடங்கிய ப்லாஸ்டிக் கலவைதான் மூலப் பொருட்கள்.