சொந்த வீடு

கிழக்கையும் மேற்கையும் இணைத்த கலைஞர்

செய்திப்பிரிவு

ஜப்பானியக் கட்டிடக் கலைஞர் அரத்தோ இசோசகிக்கு ‘கட்டிடவியலின் நோபல்’ என அழைக்கப்படும் பிரிட்ஸ்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இசோசாகி 80-களில் தொலை நோக்குப் பார்வையுள்ள கட்டிடக் கலைஞராக அறியப்பட்டவர்.

arathojpgஅரத்தோ இசோசகி

“ஆனால், இந்தக் காலகட்டத்துக்கும் அவரது கட்டிடவியல் தத்துவம் பொருத்தமானதாக இருக்கிறது” என பிரிட்ஸ்கர் விருதுக் குழுவின் செயல் இயக்குநரும் கட்டிடக் கலைஞருமான மார்த்தா தோர்ன் கூறுகிறார். மேலும் அவரது கட்டிட வடிவமைப்பு நவீனமும் மனிதத் தன்மையும் கொண்டவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக நடத்திய உரையாடலின் சுருக்கப்பட்ட வடிவம் இது.

இந்த 21-ம் நூற்றாண்டின் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள பாரம்பரியமிக்க நாடான இந்தியாவிடமிருந்து கட்டிடக் கலையில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றார். இந்தியப் பாரம்பரியம் விளைவிக்கக் கூடிய தாக்கத்தைக் குறித்து தோர்ன் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

“இங்கு வருவதற்கு முன் ஒரு ஆளாக வந்து சென்றபின் வேறொருவராகவும் மாறிப்போனதாக இந்தியாவுக்கு வந்து சென்ற சிலர் சொல்வதுண்டு. அந்தளவுக்கு இந்தியா மாற்றத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்ட நாடு. எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

ஜெய்ப்பூருக்குச் சென்றேன். அந்த அனுபவம் எதிர்பாராதது; அந்த நகரின் பிரம்மாண்டத்தில் வியந்துபோனேன். வரலாற்றுப் பெருமைமிக்க அந்த நகரின் தெருக்களில் நடக்கும்போது எனக்குள்ளே பெரிய ஆற்றலை உணர்ந்தேன்” என்கிறார் தோர்ன்.

ஜப்பானும் இந்தியாவைப் போல வளமான பண்பாட்டுப் பின்புலம் கொண்டது. இசோசாகி இந்தியக் கட்டிடக் கலையால் தாக்கம்பெற்றவர். இந்த மாதிரியான நாடுகளில் எப்போதும் நவீனத்துவத்தின் பால் தொழிற்நுட்பத்தின் பால் ஒவ்வாத தன்மை இருக்கும்.

ஆனால் இசோசாகியின் கட்டிடக் கலை பாரம்பரியத்தில் நவீனத்துவத்தைப் புகுத்தி வெற்றி கண்டது. அவரது கட்டிட வடிவமைப்புகள் கிழக்கையும் மேற்கையும் நவீனத்தையும் பாரம்பரியத்தையும் அபூர்வமான முறையில் இணைக்கின்றன. வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் அவரது வடிவமைப்புகள் நவீனத்தையும் பாரம்பரியத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகின்றன.

அவர் கட்டிடவியல் குறித்துப் பேசினார். அதன் சவால்களைக் குறித்து விவாதித்தார். இவற்றையெல்லாம் இளம் தலைமுறையிடம் எடுத்துச் சென்றிருக்கிறார்.

கட்டிட வடிவமைப்பாளராக நின்றுவிடாமல் கட்டிடவியல் உடன் பலவிதங்களில் தன்னை அவர் தொடர்புபடுத்திக் கொண்டிருந்தார். ஷாகா ஹதித் போன்ற இளம் கட்டிட வடிவமைப்பாளர்களை அவர் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினார். அவரது இந்தச் சேவைக் காகத்தான் பிரிட்ஸ்கர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தோர்ன் குறிப்பிட்டார்.

- துர்கானந்த் பல்சவார்

SCROLL FOR NEXT