சொந்த வீடு

பொங்கலே வருக...

செய்திப்பிரிவு

ஒன்றுகூடி மகிழவும் ஏற்படுத்தப்பட்டதே பண்டிகை. மேலும், அது நம் அகத்தையும் புறத்தையும் புதுப்பிக்கக்கூடியதும்கூட.

பண்டிகையை வரவேற்கும் முதல் காரியம் வீட்டைச் சுத்தம் செய்வதுதான். பொங்கல் என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டைச் சுத்தம் செய்து வெள்ளையடிப்பது காலம் காலமாகத் தமிழர்கள் செய்துவருகிறார்கள். ஆனால், நகரத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சில வீடுகளில் இது சிரமமான காரியம். அவர்கள் திட்டம் வைத்துச் சுமை கருதாமல் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்வதற்கும் வீட்டை அழகுபடுத்தாவும் சில யோசனைகள்:

> எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்தால் அறையும் சுத்தமாகும் வேலை செய்வதும் எளிதாகும்.

> தேவை இல்லாத பொருட்களைத் தூக்கிப் போடுங்கள்.

> வாரமிருமுறை பேக்கிங் சோடா மற்றும் பெராசைடு கலந்து தரையைத் துடைத்தால் வீடு பளிச்சென ஆகிவிடும்.

> குளிர் பதனப் பெட்டியில் தேவை இல்லாத மீந்துபோன உணவுப் பண்டத்தை வைக்கவேண்டாம். நாள்பட்ட சமைத்த உணவுகள் உடல் நலத்திற்கும் கேடு.

> வாட்டர் ப்யூரிபயரை வாரத்தில் ஒருமுறை எலுமிச்சம் பழத்தை வைத்துச் சுத்தப் படுத்தினால் தண்ணீர் சுவையாக இருக்கும்..

> வீட்டுக்கு வண்ணம் அடிக்க மிகவும் செலவாகும் அதனால் அழகழகான தோரணங்கள் சுவர்க் காகிதம் ஆகியவை கொண்டு நம் வீட்டை அழகுபடுத்தலாம்.

> வீட்டில் இருக்கும் பூச் செண்டுகள் எவ்வுளவு துடைத்தாலும் பளிச் என்று இருக்காது அதற்கு ஹேர் டையர் கொண்டு சுத்தம் செய்யலாம்.

> நாள்படிந்த கறைக்கு சோடா உப்பு, சிட்ரிக் உப்பு, எலுமிச்சம் பழம், வினிகர் ஆகியவற்றைக் கலந்து துடைத்தால் புதுசுபோல் ஆகிவிடும்..

> பழைய பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்து வீட்டை அலங்கரிக்கலாம்..

> வீடு முழுவதும் அலங்கார மின்விளக்குகள் பொருத்தலாம்.

> வீட்டினுள் சிறிய ரகச் செடிகளை வளர்க்கலாம்.

> உங்கள் குழந்தைகள் அறையில் கார்ட்டூன் படங்களை மாட்டலாம்.

> வீடு முழுவதும் அலங்காரப் பந்துகளை நீங்களே செய்து தொங்கவிடலாம்.

> விலை மலிவாகக் கிடைக்கிறது என்று உங்களுக்குத் தேவை இல்லாத பொருள்களை வாங்காதீர்கள். இதுவே உங்கள் வீட்டின் அழகைக் குறைத்துவிடும்.

கிருத்திகா முருகேசன்

SCROLL FOR NEXT