சொந்த வீடு

கொடிகள் பல விதம்

செய்திப்பிரிவு

முன்பெல்லாம் வீட்டுக்குப் பக்கத்தில் துணிமணிகளைக் காயப்போட விசாலமான இடம் இருக்கும். கிணற்றடியில் நனைத்த துணிமணிகளைக் கொடி கட்டிக் காயப்போடுவோம். ஆனால் இன்றைக்கு அந்த அளவுக்கு விசாலமான இடம் சிறு நகரங்களில்கூட இல்லை. சென்னை போன்ற பெரு நகரத்தில் கேட்கவே வேண்டாம்.

அதனால் பலரும் பால்கனியைத்தான் துணிமணி காயப்போடப் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்துப் பால்கனியில் துணிகாயப் போடுவதற்காகவே சில உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:

குளியலறைக் கொடி

குளியலறைக்குள்ளே கொடி கட்ட விரும்புபவர்களுக்கு இந்த உபகரணம் பொருத்தமாக இருக்கும். இது ரூ. 1,000லிருந்து கிடைக்கிறது.

iru-nilaijpg100 

இரு நிலைக் கொடி

இரு தூண்களைக் கொண்ட இந்த வகைக் கொடியும் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ரூ. 1, 000 முதல் சந்தையில் கிடைக்கிறது.

kayirujpg100 

கொடிக் கயிறு

முன்பு பயன்படுத்தியதுபோல பால்கனியின் மேல் புறத்தில் இரு சுவரையும் இணைக்கும்படி கொடி கட்டலாம். இது ரூ.200லிருந்து கிடைக்கிறது.

உத்திரக் கொடி

உத்திரத்தில் இந்த உபகரணத்தைப் பொருத்தி, காயப் போடும்போது இழுத்துப் பயன்படுத்தலாம். இது சமீபத்தில் பிரபலமாகிவருகிறது. இது ரூ 1,500இலிருந்து கிடைக்கிறது.

மடக்கும் கொடி

இதை பால்கனியில் மட்டுமல்ல வீட்டுக்குள்ளும் பயன்படுத்தலாம். தூக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டிருப்பதால் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். மடித்துவைக்கக் கூடியதாக இருப்பதால் இட நெருக்கடி உள்ள வீடுகளில் பயன்படுத்த ஏதுவானது. இது ரூ. 800-லிருந்து கிடைக்கிறது.

சுவர்க் கொடி

பால்கனி சுவரில் பொருத்திக் கொள்ளலாம். துணி காயப்போடாத சமயத்தில் இதை மடக்கிவைத்துக் கொள்ளலாம். அதனால் இட நெருக்கடி இல்லாமல் இருக்கும். இது ரூ.1,000லிருந்து கிடைக்கிறது.

SCROLL FOR NEXT