சொந்த வீடு

அழகு அலமாரிகள்

செய்திப்பிரிவு

அலமாரிகளைக் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். தொடக்க காலத்தில் அலமாரிகள் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டவையாகத் தாம் இருந்தன. பிறகு இரும்பால் செய்யப்பட்ட அலமாரிகள் சந்தைக்கு வந்தன. இந்த இரும்பு அலமாரிகள், அதன் பயன்பாட்டை அதிகமாக்கியது. மர அலமாரிகளைப் போல் அல்லாமல் இரும்பு அலமாரிகள் விலை குறைவானவையாக இருந்தன. அதனால் எல்லாத் தரப்பு மக்களும் அலமாரிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இன்றைக்கு அலமாரிகளின் பயன்பாடு விரிவடைந்துள்ளது. அலமாரிகளை வாங்கிப் பயன்படுத்துவது போய், அறையின் பரப்புக்குத் தகுந்தாற்போல் அலமாரி வடிவமைத்துக்கொள்வது இப்போது பரவலாகிவருகிறது. வீட்டுக் கட்டுமானப் பணியின்போதே அலமாரிகளுக்கான அடிப்படை விஷயங்களைச் செய்யும் வழக்கமும் இருக்கிறது. சிமெண்ட் செல்ஃப் செய்து அதன் மீது மரத்தாலோ பிவிசியிலோ அலமாரிகள் செய்யும் முறையும் இருக்கிறது. இத்தனை முறைகளில் பல வகை அலமாரிகள் உள்ளன.

சுவர் அலமாரி

இது அறையின் அமைப்புக்கு ஏற்ப செய்யப்படக் கூடிய அலமாரி. அறைக்கு அழகைத் தரக்கூடிய இந்த வகை அலமாரியும் மரம், பிவிசி போன்ற பல பொருட்களால் செய்யப் படுகிறது. இது பாரம்பரிய அலமாரி வகையைவிடக் கூடுதல் கொள்ளவு கொண்டது.

நடைவழி அலமாரி

அறையின் மூன்று பக்கமும் நிறைந்த அலமாரியை, நடைவழி அலமாரி என்கிறார்கள். நடக்கும் இரு பக்கமும் அலமாரிகள் இருப்பதால் இந்தப் பெயரில் அழைக்கிறார்கள். அதிகமான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் வைத்திருப்போருக்கு இந்த வகை அலமாரி ஏற்றது.

kathavu-alamarijpg100 

பக்க வாட்டுக் கதவு அலமாரி

சுவர் அலமாரி வகையைச் சேர்ந்த இந்த அலமாரி, பக்கவாட்டுக் கதவைக் கொண்டது. இடம் குறைவான அறைகளுக்கு இந்த வகை அலமாரி ஏற்றதாக இருக்கும்.

 pakkavaattu-alamarjpg100

பாரம்பரிய அலமாரி

இந்த வகை ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல் அலமாரிகளில் பழைய வகை. இதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்துவது எளிது. மரம், இரும்பு, பிவிசி போன்ற பல பொருட்களில் இந்த அலமாரிகள் செய்யப் படுகின்றன.

- பீமன்

SCROLL FOR NEXT