வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நம் சென்னை மாநகருக்கு வயது 379 வயது ஆகிறது. அதற்கு ஒரு வாரம் முன்பே சென்னையின் பிறந்தநாளை பல்வேறு அமைப்புகள் ‘சென்னை மாதம்’ என்ற பெயரில் கொண்டாடத் தொடங்கிவிட்டன.
இந்தத் தேதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி மதராசப்பட்டினம் என்ற ஊரை வாங்கியதற்கான ஒப்பந்தம் நிறைவேறியிருக்கிறது.
இது ஒரு கணக்குதான். அதற்கு முன்பே மதராசப்பட்டினம் என்ற ஊர் அங்கே இருந்திருக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகுதான் அந்த ஊர் ஒரு நகராக உருவெடுத்தது. அதனால் அந்தத் தேதியைக் கொண்டு இந்த நகரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகிறோம்.
மதராஸ் என அழைக்கப்பட்ட அந்தப் பழைய சென்னையின் தொன்மையையும் அதன் கம்பீரத்தையும் நமக்குப் பறைசாற்றுபவை அதன் பழைமையான கட்டிடங்கள்.
கட்டப்பட்டுப் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட அந்தக் கட்டிடங்கள் புதிய சென்னை வாசிகளுக்கு பழைய நினைவுகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கட்டிடங்கள் சிலவற்றின் அன்றைய, இன்றைய ஒளிப்படங்கள் இவை
தொகுப்பு : விபின்