ப
டங்கள், சிறிய துணுக்குகள் மூலம் சுவாரசியமாகக் கதை சொல்லும் முறையே காமிக் ஸ்ட்ரிப். இதற்கு 100 வருடத்துக்கும் மேற்பட்ட வரலாறு உண்டு. சார்லி ப்ரவுன், கார் ஃபீல்டு போன்ற கதாபாத்திரங்கள் காமிக்
மிகப் பிரபலமானவை. இங்கிலாந்து காமிக் கலைஞர்கள் வில்லியம் ஹோகர்த், வில்லியம் டவுன்செண்ட் ஆகியோர் தொடக்கத்தில் இந்தக் கலையில் பிரபலமாக இருந்தனர். ஆனால், முதல் காமிக் புத்தகத்தை சுவிட்சர்லாந்து கலைஞர் ரூடாஃப் டாஃப்ஃபர்தான் வெளியிட்டார்.
உலக அளவில் பிரசித்திபெற்ற காமிக்குகளில் ஒன்று ஷெர்மன் லகூன். இதை உருவாக்கிய கலைஞர் ஜிம் டூ மே. கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் ‘டெய்லி டைம்ஸ் அட்வகேட்’ என்னும் பத்திரிகையில் தொடராக வந்தது. தென் பசிபிக் கடல் பகுதியிலுள்ள கபுப்பு என்னும் காயல்தான் இந்த காமிக் கதைக் களம். அதில் வாழும் ஷர்மன் என்னும் ஒரு சோம்பேறி கணவன் மீன், கண்டிப்பான மேகம் என்னும் மனைவி மீன் இவர்கள் இருவர்தாம் கதாநாயகர்கள். அந்தக் காயலில் வாழும் இதர மீன்கள், நண்டு, ஆமை போன்றவை துணைக் கதாபாத்திரங்கள்.
ஒவ்வொரு காமிக் ஸ்ட்ரிப்பும் ஒவ்வொரு விதமானது. கணவன் - மனைவிக்கு இடையிலான செல்லச் சண்டைகள், வாக்குவாதங்கள், சோம்பேறிக் கணவனின் கோமாளித்தனங்கள் என சுவாரசியம் அளிப்பவை. சில காமிக்குகள் நண்பர்களுடனான உரையாடலும் இருக்கும். இவற்றுள் சுவாரசியமான ஒரு காமிக் இது:
இந்தத் திருமண நாளில் இருந்து சில தீர்மானங்கள் எடுக்க இருக்கிறேன். அத எழுதிவச்சிருக்கேன். வாசிக்கவா?
கண்டிப்பா
உன்ன விமர்சனம் பண்ண மாட்டேன்
வாவ்... குட்... குட்...
உன்ன திட்டமாட்டேன்
உன்னோட கேரக்டரோட உன்ன அக்சப்ட் பண்ணிக்குவேன்
தட்ஸ் நைஸ்
உன் சொந்தக் காரியத்தில் தலையிட மாட்டேன்
உன்னோட கருத்தையும் மதிச்சு கேப்பேன்
இந்தத் திருமண ஆண்டை இந்த மாற்றத்தோடு ஆரம்பிப்போம்.
இரு... இரு... நீயும் சில தீர்மானங்கள் எடுக்கணும் கண்ணா. அதையும் நானே எழுதிவச்சிருக்கேன். வாசிக்கவா?
என் தீர்மானத்த நீ எழுதிவச்சிருக்கியா?