ப
ழைய திரைப்படங்களைப் பார்த்தால் இன்றைக்கு நமக்குப் பெரும் வியப்பாக இருக்கும். ஒரு காதல் கடிதம் சரியான முகவரிக்குப் போய்ச் சேராததால் அந்தக் காதலர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கும். தனியாகப் பேசக்கூடச் சந்தர்ப்பம் வாய்க்காத காவிய காதல்களையும் பழைய திரைப்படங்களில் பார்க்க முடியும். 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னால் இவை எல்லாம் அபத்தங்களாகிவிட்டன. கையடக்கத் தொலைபேசிக்குள் எல்லாம் வந்துவிட்டது. காதல், ப்ரேக்-அப் என்பதெல்லாம் சாதாரண விஷயங்களாகிவிட்டன. இந்தக் கையடக்கத் தொலைபேசிக்குள் இணையம் வந்த பிறகு மூளையின் செயல்பாட்டுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. இந்த நவீன மாற்றத்தைக் குறித்த காமிக்ஸ் கார்டூன் ஓவியங்களை அமெரிக்காவைச் சேர்ந்த கொரன் ஷாத்மி வரைந்திருக்கிறார். இவைதாம் சென்ற வாரம் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஓவியங்கள். அவற்றுள் சில...