த
ஞ்சாவூர்த் தட்டு தமிழ்நாட்டின் பெருமைமிகு கலை வடிவங்களுள் ஒன்று. நினைவுப் பரிசாக வழங்கப்படும் இந்தத் தட்டைப் பலரும் பார்த்திருப்போம். இந்தத் தட்டு இந்தியாவைத் தாண்டியும் புகழ்பெற்றது.
இந்தத் தட்டு தயாரிப்புக்கென ஒரு பிரத்யேக நடைமுறையை அங்குள்ள கலைஞர்கள் கடைப்பிடித்துவருகின்றனர்.
வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால், ஒரே மாதிரியான முறையில் செய்கிறார்கள். நடுவில் கடவுளரின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இன்றைக்கு இதிலும் புதுமைகள் வந்திருக்கின்றன. இந்த வகைத் தட்டுகள் பரிசுப் பொருளாகக் கொடுப்பதற்கு மட்டுமல்ல, வீட்டின் சுவர்களை அலங்கரிக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இதுமாதிரி அலங்காரத் தட்டுகளைச் சுவரில் மாட்டி அழகுபடுத்தும் கலாச்சாரம் இங்கு மட்டுமல்ல. உலகின் பல பாகங்களிலும் உள்ளது.
அம்மாதிரியான தட்டுகள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது. இந்த வகை அலங்காரத் தட்டுகள் ரூ.600-லிருந்து கிடைக்கின்றன.