சொந்த வீடு

கட்டுமானக் கருவிகள்: செங்கற்களை இணைக்கும் கருவி

தியானன்

வீ

ட்டுக் கட்டுமானப் பணிகளில் செங்கலை அடுக்குவது முக்கியமான செயல். செங்கற்களை ஒன்றுடன் ஒன்றை இணைக்க சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பணிக்குத் தொழில் அனுபவம் உள்ளவர்கள் அவசியம். ஒழுங்காகச் செங்கல்லை அடுக்க வேண்டும். இல்லையெனில் மட்டம் சரியாக இருக்காது. அதுபோல சிமெண்டும் அதிகமாக வீணாக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கப் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதான் ‘பிரிக் லைனிங்’.

இந்த உபகரணம் செவ்வக வடிவகப் பெட்டிபோல் இருக்கும். அந்தப் பெட்டிக்குள் இரு செங்கற்கள் வைப்பதற்கான பள்ளம் இருக்கும். அதற்குள் செங்கற்களை வைத்து சிமெண்ட் கொண்டு பூசி, மட்டப்படுத்தினால் போதுமானது. இதன் மூலம் சிமெண்ட் வீணாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், அழகான மேற்புறப் பூச்சும் கிடைக்கும். ப்ளாக் கற்களைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டிடங்களுக்கு இது நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும். மேலும் அனுபவமில்லாவதர்களும் இந்தக் கருவி மூலம் எளிதாகக் கட்டுமான வேலைகள் பார்க்க முடியும். செங்கற்களை மட்டும்வைத்துவிட்டு மேல் பூச்சி இல்லாமல் பயன்படுத்தும் கட்டிடங்களுக்கு இம்முறை பொருத்தமானதாக இருக்கும்.

அயர்லாந்தில் மார்ஷல் என்பவர் பிளாஸ்டிக்கால் இந்தக் கருவியை வடிவமைத்துள்ளார். இதற்கு அவர் ப்ரிக்கி டூல் (Bricky Tool) எனப் பெயர் இட்டுள்ளார். இது அயர்லாந்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த பிரிக்கி மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவை இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இதன் விலை 39.99 யூரோ. போர்க் கால அடிப்படையில் உருவாக்கப்படும் தொகுதிக் குடியிருப்புகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஏற்றதாக இருக்கும். இந்தியாவில் மரத்தால், இரும்பால் ஆன பிரிக் லேயர் கிடைக்கிறது. 

SCROLL FOR NEXT