ப
லவற்றுக்கும் பயன்படும் தீ, எல்லையைத் தாண்டிவிட்டால் மோசமான விபத்தை ஏற்படுத்திவிடும். தீ விபத்துகளில் இரு வகை உள்ளன: இயற்கையாக ஏற்படுபவை, செயற்கையாக நம்மால் ஏற்படுத்தப்படுபவை.
உதாரணத்துக்கு, ஒரு அடர்ந்த காட்டில், மரங்கள், ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு தீ ஏற்பட்டால், காற்றால் அது பரவி பக்கத்திலுள்ள செடி, கொடி, மரங்களையும் அழித்துவிடுகின்றன. இது இயற்கையாக ஏற்படுபவை. இந்த விபத்தில் செடிகள், கொடிகள், மரங்களின் மேல் கூடுகட்டியிருந்த பறவைகளும் பலியாகின்றன.
ஆனால், செயற்கையான தீ விபத்துகள் மனிதப் பயன்பாட்டால் ஏற்படுபவை. தீ விபத்துகள் தொடர்பான செய்திகளில் பெரும்பாலும் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுவதுண்டு. அதாவது மின் வயர்களை முறையாகப் பராமரிக்காததால் இந்த விபத்து ஏற்படும். இது நமது கவனக் குறைவால் ஏற்படுவதுதான். இம்மாதிரியான விபத்துகளில் கட்டுமானங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தீ விபத்தை முன்பே தடுக்கப் பராமரிப்பு அவசியம். அதுபோல் தீ விபத்து ஏற்பட்ட பின்பு அதை எப்படித் தடுப்பது என்பதைப் பார்க்கலாம். அதாவது வீடுகள், வாகனங்களிலும் ஏற்படும் பலவிதமான தீ விபத்தைத் தடுக்க , பலவிதமான தீ தடுக்கும் முறைகள் உள்ளன. எந்த விதமான தீ விபத்துக்கு, எந்தவிதமான தீ அணைப்பு முறையை உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். தீ அணைப்பான் என்ற கருவிகளில் பலவகை உள்ளன. எந்தத் தீ விபத்துக்கு எந்தவிதமான அணைப்பான் பயன்படுத்துவது என்ற முறை உள்ளது. அந்த முறையைப் பயன்படுத்துவதற்கு முன், தீ அணைப்பானின் பெயர்களைத் தெரிந்துகொள்வோம்.
1. ஏபிசி (ABC) தீ அணைப்பான்- ABC Fire Extinguisher wisher இந்த அணைப்பான் கொண்டிருக்கும் கொள்திறன் அதாவது 2கிலோவிலிருந்து தொடங்கும்.
2. வாட்டர் சிஒ2 (Water Co2) -தீ அணைப்பான் - இதன் கொள்திறன் - 9 லிட்டரிலிருந்து 50 லிட்டர் வரை.
3. டிசிபி (DCP) தீ அணைப்பான் - இதன் கொள்திறன் - 2கிலோவிலிருந்து தொடங்கும்.
4. ஃபோம் (Foam) தீ அணைப்பான் - இதன் கொள்திறன் - 9 லிட்டரிலிருந்து தொடங்கும்.
5. சிஒ2 (Co2) தீ அணைப்பான் - இதன் கொள்திறன் - 2கிலோ/ 4.5 கிலோ.
ஏபிசி (ABC) தீ அணைப்பான்:
இந்த வகைத் தீயணைப்பான் மரக்கட்டை, காகிதம், திரவத்தன்மை வாய்ந்த பெட்ரோல், உள்ள சமையல் எரிவாயுக்களால் ஏற்படும் தீயை இன்னும் பலவிதமான தீ தடுப்பு, இந்த தீ அணைப்பானால் தடுக்க முடியும்.
தீ அணைப்பானை பற்றிய ஒரு அறிமுகம். இது பார்ப்பதற்கு, நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் அமைப்பு போன்று தோன்றும். நம்முடைய வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டரில், எரிவாயு தீர்ந்துவிட்டால் ஆண்களும் சரி, பெண்களும் சரி எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் புதிய எரிவாயு சிலிண்டரை வெகு எளிதாக மாற்றி விடுகிறார்கள்.
ஆனால், தீவிபத்து ஏற்படும் சமயத்தில், தீ அணைப்பானைக் கொண்டு தீயை அணைப்பதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறார்கள். தைரியமோ விழிப்புணர்வோ ஏற்படவில்லை. தீயைக் கண்டு பயந்து ஓடுவார்கள் அல்லது பயர் இன்ஜின் தொலைபேசிக்கு தொடர்பு கொள்வார்கள். இதற்குள் தீ காற்றினால் அதி தீவிரமாகி எங்கும் பரவி உயிர்ச்சேதமும் பொருள் சேதமும், இன்னும் இரட்டிப்பாகிவிடுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டரை எப்படிப் பயமில்லாமல் பயன்படுத்துகிறோமோ அப்படித்தான் இந்த தீ அணைப்பானையும் தீ விபத்து ஏற்படும்போது எந்தவிதப் பயமோ தயக்கமோ இன்றிப் பயன்படுத்த வேண்டும். இதற்கான பயிற்சியை முறைப்படி எடுத்துக் கொண்டால் மிக எளிதாக இதைக் கையாள முடியும். அத்துடன், அதை நன்கு பராமரித்தல் மிகவும் அவசியம்.
தொடரும்...