சொந்த வீடு

பட்டாவை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ரூஃப் அண்ட் ஃப்ளோர்

ஒரு சொத்திற்கு நீங்கள் தான் உரிமையாளர் என்பதை உறுதிபடுத்தும் ஆவணத்தைப் பெறுவது சற்று நேரமெடுக்கும் வேலை தான். ஆனால் நீங்கள் செலவுசெய்யும் அந்த நேரம் எதிர்காலத்தில் உங்களுக்கு மன அமைதியைத் தரும். நமது RoofandFloor தொடர்ந்து அளித்து வரும் சொத்து வாங்குதல் குறித்த ஆலோசனைகளை பின் பற்றும் போது சொத்து வாங்கும் நடைமுறை எளிதாகும்.

ஒரு சொத்தை வாங்குவதற்கு மிக முக்கிய ஆவணம்,பட்டா. அதை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்டா என்பது ஒரு நிலப்பகுதிக்கு சட்ட உரிமையை நிரூபிக்க வேண்டிய வருவாய் ஆவணம் . பதிவாளரால் வழங்கப்படும் இதை தாசில்தார் அலுவலகத்திலிருந்து பெற வேண்டும். பட்டாவை உங்களது பெயரில் சரியாகப் பெறுவதே நல்லது. எனவே அதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஏன் பட்டா அவசியம்?

ஏற்கனவே குறிப்பட்டது போல பட்டா தான் ஒரு இடத்தின் உரிமையாளரை சட்ட ரீதியாக உறுதிபடுத்தும் ஆவணமாக கருதப்படுகிறது. நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு பட்டா அத்தியாவசிய ஆவணமாகும். ஒருவேளை உங்கள் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முனைந்தாலும் பட்டா இருந்தால் மட்டுமே அதற்கான உரிய நிவாரணம் கிடைக்கும்.

பட்டா பெறுவது எப்படி?

ஒரு சொத்து எந்த தாலுகா/தாசில்தார் அலுவலகத்துக்கு உட்பட்டதோ அங்கு விண்ணப்பித்து பட்டா பெறலாம். பட்டாவை பெற விற்பனை பத்திரம், தாய் பத்திரம், பட்டா மாற்றலாக இருந்தால் சொத்திற்கான சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ், கட்டிடம் உள்ள பகுதியென்றால் திட்ட வரைவு மற்றும் வரி ரசீதுகளை ஆவணங்களாக இணைக்க வேண்டும்.

பட்டாவில் முரண்பாடு இருந்தால்?

பட்டாவில் பொதுவாக சிறிய குறைபாடு சாதரணமானது தான். பட்டாவுக்கும், சம்பந்தப்பட்ட மற்ற நில ஆவணங்களுக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் இருந்தால் புதிதாக பட்டா வழங்க விண்ணப்பிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT