சொந்த வீடு

மும்பையின் ‘போசிடோனோ’

ரேணுகா

பொ

துவாக ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் அல்லது சேரிகள் என்றாலே அழுக்கு படிந்த சுவர்களும், சுகாதாரமில்லாத சுற்றுப்புறங்களும்தான் அதனுடைய தோற்றமாக இருக்கும் என பலர் நினைத்துக்கொண்டுயிருக்கிறார்கள். ஆனால் இந்த தோற்றத்தை தன்னுடைய வண்ண தூரிகையால் உடைத்தெறிந்து இருக்கிறார் ‘சல் ரங் தே’ நிறுவனரான தேதீபியா ரெட் (Dedeepya Reddy). மும்பை மாநகரில் அமைந்திருக்கிறது ஆசல்பா (Asalpha) என்ற மிகப்பெரிய குடிசை பகுதி.

வளைந்து நெளிந்து உள்ள இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளும், லட்சக்கணக்கான மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதியை வண்ணமயமாக்க சுமார் 750 தொண்டர்கள் இரவு, பகலாக இணைந்து இங்குள்ள சுவர்களுக்கு வண்ணம் தீட்டியுள்ளனர். சுமார் 170 சுவர்களை சல் ரங் தே அமைப்பினர் வண்ணம் அடித்துள்ளனர். அதேபோல் 17 இடங்களில் சுவரோவியங்களையும் வரைந்துள்ளனர். இங்கு வரையப்பட்டுள்ள ஒவ்வொரு சுவரோவியமும் அங்குள்ள மக்களை அன்றாட வாழ்க்கை பிரதிபலிப்பதாக உள்ளது.

தற்போது மும்பை மெட்ரோ ரயில் வழியாக இந்த ஆசல்பா கடக்கும் ஒவ்வொரு பயணிகளும் இந்த வண்ண குடிசை பகுதியை கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். ஆசல்பா இத்தாலி நாட்டில் உள்ள போசிடோனோ என்ற பகுதியை நினைவுபடுத்துவதாக உள்ளதால் மும்பை வாசிகள் ஆசல்பாவை ‘மும்பையின் போசிடோனோ’ என அன்பாக அழைக்கிறார்கள்.

SCROLL FOR NEXT