சொந்த வீடு

மின்னணு பத்திரப்பதிவு

ரூஃப் அண்ட் ஃப்ளோர்

முதலீடு என்றவுடன் முதலில் நாம் தேர்ந்தெடுப்பது நிலத்தின் மீதான முதலீடு தான். இது காலம் காலமாக பெரியவர்களும் நமக்கு சொன்ன அறிவுரை. வீடு வாங்குதல் என்றால் அதற்கான சட்ட ஆவணங்களை முறையாக செய்வது பற்றி சொல்லவே தேவையில்லை. பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அலைவது, நீண்ட வரிசையில் காத்திருந்து வேலையை முடிப்பதே பெரும் சாதனை தான். காலம் மாறிவிட்டன. தொழில்நுட்பம் தற்பொழுது எல்லாத் துறைகளிலும் கோலோச்சியவுடன், பல வேலைகளும் சுலபமாகிவிட்டன. மின்னணு பத்திரப்பதிவு நடைமுறையில் வந்துள்ளதால், பத்திரப்பதிவை இன்னும் சுலபமாக்கிவுள்ளது.

அரசின் ஆதரவு

விரிவான நில பதிவு மேலாண்மையை உருவாக்க, ‘Digital India Land Records Modernization Programme’ (NLRMP)  என்ற திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சொத்தின் மீதான அவதூறு நிலையை கட்டுப்படுத்துவதோடு, சொத்தின் மீதான உரிமை மற்றும் வெளிப்படைதன்மையை அதிகரிக்கிறது.‘

சொத்து வரி மற்றும் சொத்து ஆவணங்கள் பராமரிப்பு ஆகியவை மாநில அரசாங்கத்திற்கு உட்பட்டதாகும். மத்திய அரசின் திட்டமானது கணினி மூலமான நில பதிவு, மின்னணு பத்திரப்பதிவு ஆகியவற்றிர்கான விரிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் மின்னணு சொத்து பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது. இவை

  • ஆந்திரா
  • கர்நாடகா
  • ஒடிஷா
  • மஹாரஷ்டிரம்
  • புது டில்லி
  • மத்திய பிரதேசம்
  • உத்திராகந்த்

இந்த மாநிலங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையை அமல்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு

  • மாநிலத்தின் ஆன்லைன் பதிவு இணையத்தை தேர்ந்தெடுங்கள்
  • உங்கள் சொத்து பற்றிய முழு விவரமும் பதிவு செய்யுங்கள்
  • எந்த விதமான சொத்து (வீடு, குடியிருப்புetc), சொத்து எவ்வாறு வாங்கப்பட்டது (அன்பளிப்பு, விற்பனை etc) போன்ற விவரங்களை பதிவிடுங்கள்
  • உங்களின் ஆதார் எண்ணை பதிவிடுங்கள்
  • சொத்தின் உரிமையாளரின் விவரங்களான பெயர், தந்தை/கணவர் பெயர், வயது ஆகியவற்றை பதிவிடுங்கள்
  • உரிமை பத்திரம் மற்றும் பவர் ஒஃப் ஆட்டார்னி ஆகியவற்றை இணைக்கவும்
  • மாநிலத்திற்கு வரையுறுக்கப்பட்ட அட்டவணை படி, பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துங்கள் (பொதுவாக இந்த கட்டணம் சொத்து மதிப்பில் 1% இருக்கும், சொத்து இருக்கும் இடத்தை பொருத்து மாறுபடும் வாய்புள்ளது)
  • பதிவு கட்டணத்தை டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட் அல்லது நெட் பாங்கிங் மூலமாக செலுத்தலாம்
  • பதிவை அங்கீகரிக்கவும், பாதுகாப்புகாகவும் OTP எனப்படும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ரகசிய எண் உங்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும்

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் “Anywhere Registration”  என்ற எந்த இடத்திலிருந்தும் பதிவு செய்யக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அனைத்து சார் பதிவாளர் அலுவலங்களும் ஒன்றாகி ஒன்றிணைகப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் மாநிலம்  முழுவதும் அமைக்கப்பட்டது. மின்னணு பத்திரப்பதிவு எந்த துணை மாவட்டத்திலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.,

உங்கள் பெயரில் உள்ள அசையா சொத்துகளை பதிவு செய்வது மிக அத்தியாவசியம். உச்ச நீதிமன்ற ஆணையின் படி விற்பனை ஆவணம் மட்டுமே சொத்தின் மீதான உரிமையை நிலை நிறுத்துவதாகாது. விற்பனையை முறையாக பதிவு செய்து முத்திரை செய்யப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மின்னணு பதிவு இணையதளங்கள்

கர்நாடகா – அரசு – குடிமகன் இணையதளமான Bhoomi மூலம் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம்

SCROLL FOR NEXT