சீ
னாவுக்கு அடுத்தபடியாக அதிகத் தேயிலை உற்பத்திசெய்யும் நாடு இந்தியா. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் தேயிலை பயிரிடப்பட்டு உற்பத்திசெய்ப்பட்டது தொடங்கியது.
அசாமைச் சேர்ந்த மணிராம் தேவன் இந்தியாவில் முதன் முதலாகத் தேயிலைப் பயிரிட்டவர் எனச் சொல்லப்படுகிறது. தொடக்க காலத்தில் இந்தியாவில் தேயிலைப் பயன்பாடு பரவலாகவில்லை.
தேயிலைப் பயன்பாட்டை அதிகரிக்க நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக அறியப்பட்ட தேயிலை பிராண்ட் சஞ்சீவனி. கிழக்கிந்தியக் கம்பெனி அசாமில் அதிக அளவில் தேயிலை உற்பத்திசெய்தது.
தொடக்கத்தில் அசாமில் மட்டும் உற்பத்திசெய்யப்பட்ட தேயிலை பின்னர் டார்ஜிலிங், மூணாறு, ஊட்டி போன்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
உலகின் முதல் தரமான தேயிலையை உற்பத்திசெய்யும் நாடாகவும் இன்று இந்தியா இருக்கிறது.
டாடாவின் டீ பாக்ஸ் உலக அளவில் மிகச் சிறந்த தேயிலையைத் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. தேயிலை உற்பத்திக்குத் தொடக்க காலத்தில் அடிமைகள்தாம் பயன்படுத்தப்பட்டனர்.
ஆனால், இன்று சுதந்திர இந்தியாவில் இந்த நிறுவனங்கள் மூலம் மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதியில் தமிழ்நாடு தேயிலை உற்பத்தி நிறுவனமான டான்டீக்கு ஆலைகள் உள்ளன. உலகத் தேயிலை தினத்தை ஒட்டி இந்தியாவிலுள்ள பிரபலமான தேயிலைத் தயாரிப்பு நிறுவனங்களின் ஒளிப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.