சொந்த வீடு

தொழில் தடங்களால் வளம் பெறுமா ரியல் எஸ்டேட்?

ஜெய்

அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட்டுக்குச் சாதகமான அம்சங்கள் குறித்துப் பல விதமான கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. இந்த விவாதத்திற்கு அப்பாற் பட்டு அதில் சென்னைக்குச் சாதகமான ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.

அதாவது சென்னை - விசாகப்பட்டினம் தொழில் தடமும் சென்னை -பெங்களூர் தொழில் தடமும் இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுள்ளன. விசாகப்பட்டினம் தொழில் தடம் மூலம் 800 கிலோ மீட்டருக்கு இடையிலான ரயில் போக்குவரத்து, துறைமுகப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மையங்களும் உருவாக வாய்ப்பிருக்கிறது. பெங்களூர் தொழில் தடத்தின் மூலமும் தொழில்கள் வளம் பெறும் எனச் சொல்லப்படுகிறது. இந்த இரு தொழில் தடங்களுக்கும் சென்னைதான் தொடக்கம் அல்லது முடிவாக இருந்தபோதும் தமிழ்நாட்டிற்கு இதனால் பெரிய பயன் விளையாமல் போக வாய்ப்பிருக்கிறது.

ஆனால் சென்னையும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒருவேளை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் வளம் பெறலாம். தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இந்தத் தொழில் தடத்தை, விசாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி வரை நீட்டிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். அது நிறைவேறும்பட்சத்தில் தமிழகம் முழுக்கவும் தேக்கமடைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழில் வளம் பெறும்.

விசாகப்பட்டினம் தொழில் தடம் மூலம் 800 கிலோ மீட்டருக்கு இடையிலான ரயில் போக்குவரத்து, துறைமுகப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மையங்களும் உருவாக வாய்ப்பிருக்கிறது.

பெங்களூர் தொழில் தடத்தின் மூலமும் தொழில்கள் வளம் பெறும் எனச் சொல்லப்படுகிறது. இந்த இரு தொழில் தடங்களுக்கும் சென்னைதான் தொடக்கம் அல்லது முடிவாக இருந்தபோதும் தமிழ்நாட்டிற்கு இதனால் பெரிய பயன் விளையாமல் போக வாய்ப்பிருக்கிறது.

ஆனால் சென்னையும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒருவேளை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் வளம் பெறலாம். தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இந்தத் தொழில் தடத்தை, விசாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி வரை நீட்டிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். அது நிறைவேறும்பட்சத்தில் தமிழகம் முழுக்கவும் தேக்கமடைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழில் வளம் பெறும்.

SCROLL FOR NEXT