இ
து கர்னாடக சங்கீதத்துக்கான மாதம். சென்னை நகர சங்கீத சபாக்களில் கச்சேரிகள் தினமும் தொடர்ந்து நடைபெறும். உலகப் புகழ்பெற்ற இந்த விழா சென்னையின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்று.
தமிழ் மாதம் மார்கழியில், ஆங்கில மாதம் டிசம்பரில் தொடங்கி ஜனவரிவரை கொண்டாடப்படும் இசைத் திருவிழா. இந்த விழா முதன்முதலாக 1927-ம் ஆண்டு கொண்டாடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்த ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1928-ல் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், பல்லடம் சஞ்சீவ ராவ், தட்சிணாமூர்த்தி பிள்ளை, புரபசர் வெங்கடசாமி நாயுடு, ஜலதரங்கம் ராமனைய்யா செட்டி உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.
முதலில் ஜார்ஜ் டவுன் பகுதியில் இயங்கிவந்த மியூசிக் அகாடமி 1955-ல் இப்போதுள்ள டி.டி.கே. சாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டது.
இதற்குள் இரு அரங்கங்கள் உள்ளன. டி.டிகே. கிருஷ்ணமாச்சாரி அரங்கம், 1955-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1600 இருக்கைகள் கொண்டது.
இரண்டாவது அரங்கமான கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அரங்கம் 1982-ல் கட்டப்பட்டது. இந்த அரங்கத்துக்குள் சிறிய கச்சேரி அறை, நூலகம், கூட்ட அரங்கு, பதிவுக் கூடம் ஆகியவை உள்ளன.
சென்னை மியூசிக் அகாடமி போல் உலகத்தின் பல நாடுகளில் உள்ள சிறந்த இசை அரங்கங்களின் ஒளிப்படத் தொகுப்பு இது.