சொந்த வீடு

பிளாஸ்டிக் பாட்டிலில் கட்டுமானக் கல்

விபின்

ர்ஜெண்டினாவில் கூகுள்.ஆக் நடத்திய சவால் போட்டியில் பவுண்டேஷன் எக்கோன்குளோசியா என்னும் அரசுசாராத் தொண்டு நிறுவனத்தின் புதிய கட்டுமானப் பொருளான ‘பெட்பிரிக்ஸ்’ முதல் பரிசைப் பெற்றது.

கட்டிடக் கலையைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு விதமாக வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அதனால் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு சில தீமைகளும் இருக்கின்றன. கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்கள் முழுவதும் இயற்கையை அழித்துதான் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக ஆற்று மணல் கான்கிரீட் கலவையின் முக்கியமான பாகப் பொருள். மரம் கதவுகள் செய்யப்படுகிறது. அதுபோல செங்கல் தயாரிப்புக்கான மண் பூமியிலிருந்துதான் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் மண் வளம் பாதிக்கப் படும். மேலும் செங்கலைச் சுட அதிக அளவு வெப்ப ஆற்றல் தேவைப்படும். விறகுகளை எரித்து அதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அதற்காக மரங்கள் பல முறிக்கப்படுகின்றன.

தொடக்கக் கட்டத்தில் செங்கல் பயன்படுத்துவது இந்த அளவுக்கு இல்லை. அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டுதான் வீடு கட்டுவார்கள். ஆனால் இன்றைக்குப் பல கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் இடத்திற்கும் செங்கற்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. செங்கல்தான் கட்டிடங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என உறுதியான நம்பிக்கை நம்மிடையே நிலவுகிறது. இவற்றைத் தவிர்த்து சுற்றுச் சுழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்துவது காலத்தின் தேவை. அப்படியான தேவையை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த பெட் பிரிக்ஸ்.

பெட் பாட்டில் என அழைக்கப்படும் குளிர்பான பாட்டில் நாள் ஒன்றுக்கு அதிகமாகக் குப்பையில் வீசப்படுவதுண்டு. இந்த பாட்டில்கள் மக்கும் தன்மையற்றவை. இதனால் இவை வெளியில் வீசப்படும்போது ஒரு உறைபோலப் பூமியின் மேற்பரப்பை மூடிவிடும். அந்தப் பகுதியில் மழைநீர் இறங்காது ஒரு சதுர அடியை நான்கைந்து பாட்டில்கள் சேர்ந்து மறைப்பதைப் போல இன்னும் சில ஆண்டுக்குள் பூமியே இந்தப் பாட்டிகளால் மூடப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்ய வேண்டியது அவசியம். அதே சமயம் அதிக சக்தியை எடுத்துக்கொள்ளும் செங்கல்லுக்கும் மாற்றாக ஒரு கட்டுமானப் பொருளையும் கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த பெட் பிரிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவில் அல்டா கிரசியா நகரத்தில் இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதில் பெட் பாட்டில்கள் களிமண்ணைக் கொண்டு இந்த கட்டுமானக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு செங்கல்லைத் தயாரிக்க 12 பெட் பாட்டில்கள் தேவைப்படுகின்றன இந்த பெட் பிரிக்ஸுக்கு காப்புரிமையையும் வாங்கப்பட்டுள்ளது. ஐ.நா. அமைப்பும் இதை அங்கீகரித்துள்ளது.

SCROLL FOR NEXT