தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் கதைகளாகச் சொல்லப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு தீபாவளி என்பது தீபத்தை, நெருப்பை வணங்குவதற்கான பண்டிகை எனலாம். தமிழ்த் திருநாளில் சூரியனை வணங்குவதுபோல இந்தத் தீபத் திருநாளில் எல்லோரும் ஒளியை வணங்குகிறார்கள்.
இந்தத் தீபத் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கொண்டாடப்படும் தீபத் திருவிழா உலகப் பிரசித்திபெற்றது.
இது அல்லாமல் சீனாவில் புத்தாண்டை ஒட்டியும் தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் தீபத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அங்கு இவை நகரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டாடப்படுகின்றன.
அதன் பாதிப்பாலோ என்னவோ ஆசிய நாடுகளிலும் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் இதேபோல் ஒரு தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இம்மாதிரியான தீபத் திருவிழாக்களின் ஒளிப்படத் தொகுப்பு இது.