பெண் இன்று

இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்

Guest Author

திருமணமாகி 11 ஆண்டுகள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. வீடுகட்டி நாங்கள் தனியாக வந்த பிறகுதான் வீட்டு வேலைகளின் பக்கம் கவனம் சென்றது. என் இணையரும் வேலைக்குச் செல்வதால் மாலை பணி முடிந்து வந்தபின் முதல் நாள் துவைத்த துணிகளை மடித்துவிட்டு அன்றைய நாளின் துணிகளைத் துவைப்பேன்.

பணி ஓய்வுக்குப் பிறகு பத்து வருடங்களாகக் காலையில் துவைப்பது, மாலையில் மடித்து வைப்பது, சமையலறையில் தேவையான வேலைகளை இணையருக்கும் மருமகளுக்கும் செய்து கொடுப்பது என வேலைகளைப் பிரித்துக்கொண்டுள்ளேன். காலை 5.15 மணிக்கு எழுந்து வாசலைச் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து, பறவைகளுக்குச் சாப்பிட ஏதாவது வைப்பேன்.

          

இவற்றை நாள் தவறாமல் செய்யக் காரணம் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் நான் விடுப்பு எடுக்காமல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய உறுதுணையாக இருந்த என் மனைவியின் பங்களிப்புதான்.

என் இணையரின் ஒத்துழைப்பு சாதாரண மானதல்ல. இப்போது அதைத் திருப்பிச் செலுத்த வேண்டுமல்லவா? அனைத்தையும் விடக் குடும்பமே இன்றியமையாதது. கௌரவம் அதற்கு அடுத்ததுதான். ஆண் - பெண் பேதமெல்லாம் இருபதாம் நூற்றாண்டுடன் சரி.

- ந.மனோகரன், சிங்காநல்லூர், கோவை.

SCROLL FOR NEXT