பெண் இன்று

பெண் எழுத்து: இது ஆண்களுக்கும்தான்

செய்திப்பிரிவு

துப்பட்டா போடுங்க தோழி
கீதா இளங்கோவன்
ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9566331195/9789381010.

‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை’ என்று காலம் காலமாக ஆண்களால் கற்பிக்கப்பட்டுவந்த பிற்போக்குத்தனங்களை எதிர்த்துப் பெண்கள் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படிப் பெண்கள் மீது இந்தச் சமூகம் ஏற்றிவைத்திருக்கும் சுமைகளையும் அவற்றைக் களைவதற்கான தேவையையும் முன்வைத்து கீதா இளங்கோவன் எழுதியிருக்கும் ‘துப்பட்டா போடுங்க தோழி’ புத்தகம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்குமான கையேடு. ‘பெண்ணின் மனது ஆழம்’ என்று நம்பவைக்கப்பட்டிருக்கும் ஆண்கள் இதில் உள்ள கட்டுரைகளை வாசித்தால் பெண்ணைப் புரிந்துகொள்ளக்கூடும். தாய்மை, குடும்பப் பெண், கற்பு, புனிதம் போன்ற சொல்லாடல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார் கீதா. பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அசட்டையாக இருப்பதைக் கண்டிக்கும் இவர், நட்பு, பயணம், சுயபரிவு போன்றவை பெண்களின் மன விடுதலைக்கான சாவியாக அமையும் எனப் பரிந்துரைக்கிறார். நாலு பேருக்குப் பயந்து நம் மகிழ்ச்சியைக் காவு கொடுக்காமல் நமக்கான வாழ்வை வாழ்வதே பெண்ணுரிமை என்பதே இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் சாரம். இந்தப் புத்தகம் தற்போது மலிவு பதிப்பாக வெளிவந்துள்ளது.

SCROLL FOR NEXT