தாய்மையைச் சிறப்பிக்கும் வகையில் வரும் ஜூன் 4-ம் தேதி சென்னையில் ‘சூப்பர் மாம்’ போட்டியை ‘தி இந்து’ நடத்துகிறது. தங்கள் குடும்பத்தினர் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பைப் பொழிகிற ஒவ்வொரு அம்மாவுக்கும் தன் மரியாதையைத் தெரிவிக்கிறது ‘தி இந்து’.
கால நேரம் பார்க்காமல் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் அம்மாக்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஏ.ஆர்.சி. பன்னாட்டு கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ‘சூப்பர் மாம்’ போட்டியை நடத்துகிறது ‘தி இந்து’. வடபழனி ஃபாரம் விஜயா மாலில் நடைபெறும் போட்டியின் தொடக்கச் சுற்று ஜூன் 4-ம் தேதியும் அரையிறுதி, இறுதிச் சுற்றுகள் ஜூன் 5-ம் தேதியும் நடக்கின்றன. அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பையும் அம்மாக்களின் தனித்திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெறும்.
போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் >www.thehindu.com/supermom2016 என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். 9940615300/9566400700 ஆகிய எண்களை வேலை நாட்களில் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணிவரை தொடர்புகொண்டு பதிவுசெய்யலாம். அல்லது thehindusupermom2016@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பிப் பதிவுசெய்யலாம்.
இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி, ஸ்ரீநிவாஸ் சில்க்ஸ் அண்டு சாரீஸ், கரூர் வைஸ்யா வங்கி, ஃபாரம் விஜயா மால் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.