பெண் இன்று

தலைவாழை: பன்னீர் திராட்சைப் பழரசம்

செய்திப்பிரிவு

வாட்டுகிற வெயிலுக்கு இதமாகக் குளிர்பானங்கள் குடிப்பதுதான் பலரது விருப்பத் தேர்வாக இருக்கிறது. குளிர்பானங்களுக்குப் பதில் வீட்டிலேயே பழச்சாறு தயாரித்துப் பருகலாம் என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். அந்தந்த பருவத்தில் விளைகிற பழங்களைச் சாப்பிடுவதுதான் நல்லது என்று சொல்லும் இவர் கோடைகாலத்தில் அதிகமாக விளையும் பன்னீர் திராட்சையில் பழரசம் செய்யக் கற்றுத்தருகிறார்.

என்னென்ன தேவை?
நன்கு பழுத்த பன்னீர் திராட்சை - 100 கிராம்
சர்க்கரை - 3 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
திராட்சை எசென்ஸ் - சில துளிகள்
ஐஸ் கட்டி - இரு துண்டுகள்

எப்படிச் செய்வது?
பன்னீர் திராட்சை, சர்க்கரை, உப்பு, திராட்சை எசென்ஸ், ஐஸ் துண்டுகள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள். அதை 200 மி.லி தண்ணீருடன் கலந்து பரிமாறுங்கள். திராட்சை அதிகமாகப் புளித்தால் சர்க்கரையைக் கொஞ்சம் அதிகமாகச் சேர்க்கலாம்.
தொகுப்பு: ப்ரதிமா

லட்சுமி சீனிவாசன்
SCROLL FOR NEXT