பாலினச் சமத்துவம் குறித்து எழுதப்படும் கட்டுரைகளுக்கு, ‘பாப்புலேஷன் ஃபர்ஸ்ட்’ அமைப்பும் ஐ.நா.வின் மக்கள் நிதியமும் இணைந்து விருது வழங்கிவருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது, நவம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 10 மொழிகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட விருதில், ‘பெண் இன்று’ கட்டுரை தமிழ் மொழிப் பிரிவில் தேர்வானது. சேலம் சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை மையமாக வைத்து பிருந்தா சீனிவாசன் எழுதிய ‘இன்னும் என்ன மிச்சம் வைத்திருக்கிறோம் குழந்தைகளுக்கு?’ என்கிற கட்டுரைக்கு இந்த விருது வழங்கப்பட்டது.