நாம் பெண்களுக்கு அவர்களைச் சுருக்கிக்கொள்ளத்தான் கற்றுத்தருகிறோம். இயல்பைவிடச் சிறியவர்களாக இருக்கும்படி சொல்கிறோம். அவர்களுக்கு லட்சியம் இருக்கலாம்; ஆனால், அது உயர்வானதாக இருக்கக் கூடாது என்கிறோம். அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையலாம்; ஆனால், மாபெரும் வெற்றியை அடையத் தேவை யில்லை என்கிறோம். இல்லையென்றால் ஆண்கள் பதறிவிடுவார்கள்.
நான் ஒரு பெண், அதனால் திருமணம்தான் என் வாழ்க்கையின் லட்சியம் என்று நான் நினைக்க வேண்டும். திருமணத்தை அடிப்படையாக வைத்தே என் செயல்களைத் தீர்மானிக்க வேண்டும். அனைவரும் சொல்வதைப் போல் காதலையும் அன்பையும் பரஸ்பர உதவியையும் திருமணம் தருகிறது என்றால், திருமணம்தான் வாழ்க்கையின் இலக்கு என்று ஏன் ஆணுக்கும் அதேபோல் சொல்லி வளர்ப்பதில்லை?
பெண்ணுக்குப் பெண்ணைப் போட்டியாளராக நிறுத்து கி றோம். ஆனால், வேலை - அது சார்ந்த சாதனை என்பது போன்ற ஆரோக்கியமான போட்டியாக அது இருப்பதில்லை. மாறாக ஆணைக் கவர்வதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆணைப் போன்ற தனித்த பாலினமாகப் பெண்கள் இருக்க முடியாது என்று சொல்லித்தான் பெண்களை வளர்க்கிறோம்.
- சீமாமந்தா எங்கோசி அடிச்சீ, நைஜீரிய பெண்ணிய எழுத்தாளர்.