கலை வண்ணம் மிளிரும் பரிசுப் பொருட்களை, பயன்படுத்திய தேங்காய் மூடி, `டிஷ்யூ` காகிதம் ஆகிய வீணாகும் பொருட்களைக் கொண்டு செய்து அசத்துகிறார் ஜெய்னப் நஸிமா. சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ள இவர், இதனை பள்ளி மாணவர்களுக்கும், இல்லத்தரசி களுக்கும் கற்றுத் தருகிறார்.
பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்த இவர், இக்கலை மீது கொண்ட ஆர்வத்தால் அப்பணியை விட்டு விலகி, வீட்டிலேயே விருப்ப முள்ளவர்களுக்கு இக்கலையைக் கற்றுத் தருகிறார். இவரிடம் ஆங்கிலப் பாடம் கற்க வரும் மாணவ, மாணவிகளே இவரது முதல் விமர்சகர்களாம். பின்னர் அவர்களும் ஆர்வம் கொண்டு இவரிடம், இக்கலையைத் கற்றுத் தருமாறு கேட்க, மாணவர் கூட்டம் பெருகியது.
இவர் தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். தற்போது மூன்று ஆண்டுகளாக இதனை முழு நேரமாகச் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுப் பொருட்களான பென் ஸ்டாண்ட், பொம்மைகள், கூடைகள், மலர்க்கொத்து போன்ற பல பொருட்களைச் செய்ய, பயன்படுத்தி வீணாகும் பொருட்களையே உபயோகப்படுத்துகிறார்.
காகிதத்தை சுருட்டி, கயிறு போல் ஆக்கி, அதனைக் கொண்டு மூங்கில் கூடை போல் பின்னு கிறார். ஓவியங்களை அக்ரலிக் வண்ணங் களை பயன்படுத்தி வரைகிறார். இது மட்டுமின்றி கண்ணாடியில் வரையும் ஒவியங்களும் உண்டு.
காகிதத்தை சுருட்டி, கயிறு போல் ஆக்கி, அதனைக் கொண்டு மூங்கில் கூடை போல் பின்னு கிறார். ஓவியங்களை அக்ரலிக் வண்ணங் களை பயன்படுத்தி வரைகிறார். இது மட்டுமின்றி கண்ணாடியில் வரையும் ஒவியங்களும் உண்டு.
பூக்களை எப்படிச் செய்து பார்த்தாலும் அழகாக இருக்கும் என்று கூறிய இவர், இந்த செயற்கை பூக்களை செய்வதற்காக ஸ்பான்ச், ஃபோர்ம் ஷீட், ஸ்டாக்கின்ஸ் துணி, மெல்லிய கம்பி, வண்ணக் காகிதங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மலர்க் கூடை செய்கிறார். பொம்மை ஆமையின் ஓடு, பயன்படுத்திய பழைய தேங்காய் மூடி மற்றும் `டிஷ்யூ` பேப்பர் கொண்டு செய்யப்பட்டது. பொருட்களை வாங்கித் தருவதில் அவரின் கணவர் பெரிதும் உதவுவதாகக் கூறினார் ஜெய்னப் நஸிமா.