பெண் இன்று

இப்படித்தான் சமாளிக்கிறோம்: தொடரும் தேடல்

செய்திப்பிரிவு

ஆசிரியப் பணியின் முழுமையை இந்த ஊரடங்கு உணர்த்தியிருக்கிறது. அண்மையில் எங்கள் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி னோம். இணையம் மூலம் மாணவர்களுக்கு எப்படி எளிமையாகப் பாடம் நடத்தலாம் என்ற யோசனையின்போது எங்களுக்கு ‘கூகுள் கிளாஸ்ரூம்’ பற்றித் தெரியவந்தது.

நேரில் நடத்துவதைப் போல இல்லையென்றாலும் மாணவர்களுக்குப் பாடங்களைச் சரியான விதத்தில் எடுத்துச் செல்ல வேண்டுமே என நான் ஆராய்ச்சியில் இறங்க, என் செல்போனை செயலிகள் பல ஆட்கொண்டுவிட்டன. நான் பதிவேற்றம் செய்யும் குறிப்பு மாணவர்களைச் சென்றடையும்போது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கணித ஆசிரியையான நான், மாணவர்களுக்காகக் கணினி ஆசிரியையாகவும் மாறிவருகிறேன். மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்ற தேடலுடன் ஒப்பிடும்போது ஊரடங்கு ஒரு பொருட்டே இல்லை.

- ரேவதி விஸ்வநாதன், சின்னமனூர்.

SCROLL FOR NEXT