பெண் இன்று

ஒரு முதல்வரின் விழிப்புணர்வுப் பாடல்!

செய்திப்பிரிவு

வா.ரவிக்குமார்

கரோனா என்னும் வைரஸ் வல்லரசு நாடுகளின் அதிபர்களிலிருந்து மாநகராட்சி உறுப்பினர்கள்வரை பலரையும் வீதிக்குக் கொண்டுவந்து, அதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வைத்திருக்கிறது. காவலர்கள், நாடகக் கலைஞர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கு முயன்றுவருகின்றனர்.

இவற்றுக்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதி, மெட்டமைத்து இந்திரனீல் சென் பாடியிருக்கும் ‘ஸ்தப்த கரோ ஜப்த கரோ’ எனும் பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

“கரோனாவை நினைத்துப் பயப்பட வேண்டாம். கூட்டத்திலிருந்து விலகி இரு. தொற்றும் கிருமி தொட முடியாத தொலைவில் இரு. நாம் வாழ்வதற்குப் பிறந்தவர்கள். நாம் தோல்வியை விரும்பாதவர்கள். நாம் மனத்தளவில் ஒன்றானால், கரோனாவால் நம்மை எதிர்க்க முடியுமா? அரசு உத்தரவுகளைக் கடைப்பிடியுங்கள். வதந்திகளை நம்பாதீர்கள்.

கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெல்வோம்...” என்னும் மம்தாவின் வரிகள், மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. இந்தப் பாடலால் ஈர்க்கப்பட்ட புகழ்பெற்ற ஹார்மோனிகா இசைக் கலைஞர் டாக்டர் பபிதா பாசு இந்தப் பாடலை மவுத்-ஆர்கனில் வாசித்து, நெருங்கிய நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, “என்னால் முடிந்த சேவை இது” என்று சொல்லியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி எழுதிய பாடலின் காணொலி: https://bit.ly/2y2XTX2

SCROLL FOR NEXT