படங்கள்: பு.க.பிரவீன் 
பெண் இன்று

தலைவாழை: புக்லின் (மேகாலயம்)

செய்திப்பிரிவு

தொகுப்பு: ப்ரதிமா

புக்லின் (மேகாலயம்)

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு – 1 கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
பால் பவுடர் – அரை கப்
ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன்
நெய் – 1 கப்
பாதாம், குங்குமப்பூ – அலங்கரிக்க

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் ஊற்றி, கடலை மாவு, சர்க்கரை, பால் பவுடர், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். நெய் உருகி எல்லாம் ஒன்றுசேர்ந்து வரும்போது நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டுங்கள் பாதாமைத் தூவி அலங்கரியுங்கள். ஒரு மணி நேரம் கழித்து, துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.

- ர.கிருஷ்ணவேணி

SCROLL FOR NEXT