படங்கள்: பு.க.பிரவீன் 
பெண் இன்று

தலைவாழை: ஷீப்தா (காஷ்மீர்)

செய்திப்பிரிவு

தொகுப்பு: ப்ரதிமா

ஷீப்தா (காஷ்மீர்)

என்னென்ன தேவை?

நெய் – 5 டீஸ்பூன்
துருவிய பனீர் – அரை கப்
ரவை – அரை கப்
அரைத்த ஆப்பிள்,
வாழைப்பழம் – அரை கப்
பொடித்த பாதாம்,
பிஸ்தா, வால்நட், அக்ரூட் – கால் கப்
பேரீச்சை,
உலர் திராட்சை – தலா 10
பால் – கால் கப்

எப்படிச் செய்வது?

பேரீச்சையையும் உலர் திராட்சையையும் பாலில் ஊறவைத்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் நெய்யில் பனீரை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு டீஸ்பூன் நெய்யில் ரவையைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள்.

இதனுடன் அரை கப் தண்ணீரை ஊற்றிக் கிளறுங்கள், ரவை வெந்துவரும்போது அரைத்த பழக்கலவை, அரைத்த பேரீச்சம்பழம், பொடித்த பாதாம் கலவை, வதக்கிய பனீர் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். மீதமுள்ள நெய்யை இதில் ஊற்றி நன்றாகச் சுருண்டு வரும்வரை கிளறுங்கள். கலவை நன்றாகச் சேர்ந்துவந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பிறகு பரிமாறுங்கள்.

- ர.கிருஷ்ணவேணி

SCROLL FOR NEXT