தொகுப்பு: ப்ரதிமா
கேசர் பேதா (வாராணசி)
என்னென்ன தேவை?
வெள்ளைப் பூசணிக்காய் – அரை கிலோ
சர்க்கரை – 1 கப்
சுண்ணாம்பு – 2 சிட்டிகை
பொடித்த கசகசா, பாதாம் – தலா 2 டீஸ்பூன்
குங்குமப்பூ – 2 சிட்டிகை
எப்படிச் செய்வது?
மிதமான சூட்டில் உள்ள மூன்று கப் தண்ணீரில் சுண்ணாம்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தோல் நீக்கிய பூசணிக்காயை விருப்பமான வடிவில் வெட்டி முள்கரண்டியால் சிறு துளைகள் இட்டு சுண்ணாம்புத் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.
சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பிப் பதம் வரும்வரை கொதிக்க விடுங்கள். இதனுடன் பொடித்த ஏலக்காய், பாதாம், குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஊறவைத்துள்ள பூசணிக்காயைத் தண்ணீரில் நன்றாக அலசி, சர்க் கரைப் பாகில் சேர்த்துக் கிளறி, பத்து நிமிடங்கள் மூடிவிடுங்கள். பிறகு தட்டில் அடுக்கி பொடியாக அரிந்த பாதாம் துண்டுகளைத் தூவிப் பரிமாறுங்கள்.
- ர.கிருஷ்ணவேணி