பெண் இன்று

பளபள முகத்துக்குப் பப்பாளி

செய்திப்பிரிவு

# டீன் ஏஜ் பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் மெல்லிய பூனை ரோமம் வளரும். இதை அகற்ற ஒரு வழி இருக்கிறது. குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகிய மூன்றையும் மாவு போல் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு ரோமம் முளைத்துள்ள இடங்களில் அதைப் பூசிவந்தால், ரோமம் உதிர்ந்துவிடும். மீண்டும் முளைக்காது.

# இட்லி மாவில் ஒரு வெற்றிலையைப் போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது. புளிப்பும் அதிகம் இருக்காது.

# பப்பாளிப் பழத்தின் சதைப் பகுதியை மசித்துக் கூழ் போல் முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

# நெற்றியில் குங்குமம் வைப்பதால் கறுப்புத் தழும்பு ஏற்பட்டுள்ளதா? சுத்தமான சந்தனத்துடன் கடுக்காயைச் சேர்த்துத் தடவிவர, குணம் கிடைக்கும்.

# அன்னாசிப் பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சித் தொல்லைகள் இருக்காது. அன்னாசிப் பழம் ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தவும் செய்கிறது.

# முட்டையின் வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சீயக்காய்த் தூள் போட்டுக் குளியுங்கள். முடி பளபளப்பாக இருப்பதுடன் உதிர்வதும் தடுக்கப்படும்.

# வேப்பம்பூவைப் பறித்துத் தலையில் வைத்து ஒரு துணியால் கட்டுங்கள். ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலையிலுள்ள பேன்கள் எல்லாம் ஒழியும்.

# புதினா இலையைப் பொடி செய்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பற்கள் பளிச்சென்று இருக்கும்.

# பயன்படுத்திய தேயிலைத் தூள், முட்டை ஓடுகள் இரண்டையும் வெயிலில் உலர்த்தி செடிகளுக்கு உரமாகப் போட, அவை நன்கு வளரும்.

# பிரம்பினால் செய்யப்பட்ட பொருட்களில் அழுக்குப் படிந்துள்ளதா? அவற்றின் மீது எலுமிச்சைச் சாற்றைத் தேயுங்கள். அழுக்கு நீங்கிவிடும்.

# ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளன.

- மேகலா, சென்னை.

SCROLL FOR NEXT