பெண் இன்று

ஸ்மார்ட் போனை ஆயுதமாக்கலாம்

ஷங்கர்

மும்பையிலிருந்து புவனேஸ்வருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் ஒரு முதியவர், தனது முன்சீட்டில் பயணம் செய்த பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றார்.

அந்தச் செயலைப் பொறுக்கமுடியாத அந்தப் பெண், விமானம் தரையிரங்கும் வேளையில் எழுந்து நின்று, அந்த முதியவரின் செயலைக் கண்டித்தார்.

அத்துடன் அதை ஸ்மார்ட்போனில் வீடியோவாகப் படம்பிடித்து யூடியூபிலும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை ஐம்பது லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் அந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

இரண்டு நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் அந்த பெண்ணைச் சீண்டிய முதியவர் முகத்தை மூடி மன்னிப்பு கேட்கிறார்.

SCROLL FOR NEXT