2050-ல் உயர்படிப்பு படித்த இந்தியப் பெண்களில் பத்தில் ஒருவருக்கு பொருத்தமான மணமகன் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய ஆண்களில் பெரும்பாலோர் தற்போது வரை தங்களைவிட படிப்பில் குறைந்த பெண்களையே மணமுடிக்க விரும்புகின்றனர்.
இந்த அணுகுமுறை தொடர்ந்தால் பொருத்தமான மணமகன் மற்றும் மணமகள் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருக்கும். 45 வயதிலிருந்து 49 வயதுவரை திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் சதவீதம் தற்போது 0.07 ஆக உள்ளது.
2050-ல் அது 9 சதவீதமாக அதிகரிக்கலாம்.