பெண் இன்று

நல்லவையும் அல்லவையும்

அகிலாண்டேஸ்வரி ஐயர்

திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிக்கிறது. அதாவது அமாவாசை முதல் பவுர்ணமிக்கு இடைப்பட்ட நாட்களில் வருகிற காலம் வளர்பிறை நாட்கள் சுக்லபட்ச திதிகள் என்றும் பவுர்ணமி முதல் அமாவாசைக்குள் இருக்கிற இடைப்பட்ட நாட்களில் வருகிற காலம் தேய்பிறை நாட்கள் கிருஷ்ணபட்ச திதிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வளர்பிறை கால திதிகள்

ப்ரதமை, துவிதியை, நவமி, திருதியை, தசமி, சதுர்த்தி, ஏகாதசி, பஞ்சமி, துவாதசி, சஷ்டி, திரயோதசி, ஸப்தமி, சதுர்தசி, அஷ்டமி.

தேய்பிறை கால திதிகள்

ப்ரதமை, துவிதியை, நவமி, திருதியை, தசமி, சதுர்த்தி, ஏகாதசி, பஞ்சமி, துவாதசி, சஷ்டி, திரயோதசி, ஸப்தமி, சதுர்தசி, அஷ்டமி.

வளர்பிறை திதி

வளர்பிறை நாட்களில் (அமாவாசை) பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி தவிர மற்றவை உத்தமம்.

அமாவாசை :

கரணங்களைப் பார்த்து முடிவு செய்யவும்.

தேய்பிறை திதி

பவுர்ணமிக்கும் பின் வரும் தேய்பிறை நாட்களில் துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, சதுர்தசி முதலியவை நல்ல நாட்கள். திருதியை முதல் ஸப்தமி வரையுள்ள தேய்பிறை நாட்கள் வளர்பிறை நாட்களுக்கு ஒப்பான நல்ல நாட்கள்.

கரணம் :

திதியில் பாதியளவு, கரணம் எனப்படும்.

கரணங்கள் மொத்தம் பதினொன்று.

பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரஜை - உத்தமம்

வணிஜை, பத்திரை - மத்திமம்

சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் - அதமம்

‘கரணம் தப்பினால் மரணம்’ என்பார்கள். இது கம்பியில் நடப்பதற்கும் குட்டிக் கரணத்துக்கும் சொன்னது கிடையாது.

சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் என்ற நான்கு கரணங்களும் மிகவும் பொல்லாதவை. இந்தக் கரணங்கள் குறித்தே இந்தப் பழமொழி கூறப்பட்டது. இந்த நான்கு கரணங்களில் எந்தவித முக்கியமான காரியங்களையும் செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனைய பவம் முதல் கரஜை வரையுள்ள ஐந்து கரணங்களும் நன்மை தருவன.

சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்துக்கினம் இவை நான்கும் பெரும்பாலும் அமாவாசையை ஓட்டியே வரும். அமாவாசைக்கு முதல் நாள் அல்லது அமாவாசையன்று அல்லது மறுநாள் என மாறி மாறி வரும். அதனால்தான் அமாவாசைக்கு முதல் நாள், அமாவாசை நாள் மற்றும் அதற்கு மறுநாள் எதையும் தவிர்ப்பது நல்லது என்றனர் முன்னோர்.

இன்றைய காலத்தில் அமாவாசை நிறைந்த நாள் என்று எல்லாவற்றையும் செய்கிறார்கள். அன்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதால் அவர்களது ஆசி கிட்டும் என்பதால் அப்படிச் சொல்கின்றார்கள். இருந்தாலும் அன்று இந்த நான்கில் ஏதேனும் ஒரு கரணம் இருப்பின் அதைக் கூடிய வரைக்கும் தவிர்த்து விடுங்கள்.

மேற்கண்ட மூன்று நாட்களில் எதுவும் செய்யாதிருப்பதே நல்லது. ஆனால் சனிக்கிழமையன்று வரும் அமாவாசை சிறப்பானது. அன்று எதைச் செய்தாலும் நிலைத்து நிலை பெருகி, வளம் சேர்க்கும்.

SCROLL FOR NEXT