ஆய கலைகள் 64-ல் ஜோதிடக்கலை ஏனும் சாஸ்திரக் கலை ஏழாவதாக இடம் பெற்றுள்ளது.
ரிக் வேதம், யஜூர்வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களும் மிகப் பழமையான வேதங்களாகக் கருதப்படுகின்றன. இவை நான்கும் இம்மைக்கு, இப்பிறவிக்கு நல்வழி காட்டும் நான் மறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
64 கலைகளில் ஏழாவதாகவும் ஆறு சாஸ்திரங்களில் ஆறாவதாகவும் இடம்பெறும் இந்த ஜோதிடக் கலைக்கு 18 ரிஷிகளின் வழிமுறையும், உறவு நிலையும் மற்றும் நவகிரகங்களும், ரிஷிகளின் வம்சாவளியில் வந்தவையே எனவும் முன் நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் பிரபஞ்சங்களில் ஜீவராசிகளைத் தோற்றுவித்து அவற்றை ரட்சித்துக் காத்து, ஆட்டிப்படைக்கும் கிரியைகளை மேற்கொண்டனர்.
ஜீவராசிகளை பிரம்மன் சிருஷ்டித் தாலும் அப்பிரம்மன் சிவனுடைய அருளையும் ஏற்றுத்தான் சிருஷ்டித் தொழிலைச் செய்ய வேண்டியிருந்தது. இதன் காரணமாகத்தான்
தவமுடை பிரம்ம தேவன்
தனது கை தொடங்கி முன்னர்
சிவனுடைய அருளினாலே
ஜென்மத்தில் நிச்சயிப்பான்
என்ற பாடல் எழுந்துள்ளது.
கூட்டு முறையில் உண்டான சிருஷ்டித் தொழிலில் மும்மூர்த்தியரின் தனித்தனிக் கடமைகள் என்னென்ன?
பிரம்மா: ஜீவராசிகளின் சிருஷ்டிகர்த்தா
விஷ்ணு: ஜீவராசிகளின் சம்ரட்சணையை மேற்கொள்பவர்
சிவன்: ஜீவராசிகளின் ஆயுள் முடியும்போது ஜீவராசிகளை அழித்து வருபவர்.
இதை முறையே ஆக்கல், அழித்தல், காத்தல் என்று மூன்று கிரியைகளாக ஏற்று கடைப்பிடித்து வந்ததாக புராண இதிகாசங்கள் கூறுகின்றன.
பிரம்மன் தனக்கு சிருஷ்டித் தொழிலுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு ரிஷிகணங்கள், ரிஷிகள் ஆகியோரை தமது மானசீக புத்திரர்களாகத் தோற்றுவித்தார். அவர்களுள் சப்தரிஷிகள் எனப்படும் எழுவர் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் முறையே மரீசி, அத்திரி, ஆங்கிரஸ, பிருகு, கிருது, புவஸ்தியர், வசிட்டர் (ஏழாவது தலைமுறை), பரத்துவர்கள் என்பவர் ஆவர்.
இங்கு நவகிரகங்களின் உறவு நிலையும் மற்றும் நவகிரகங்களும் ரிஷிகளின் வம்சாவளியில் வந்தவையே என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.