பொதுப் பிரச்சினைகளுக்கு வெளியே வரத் தயங்கிய பெண்களைக்கூட போராட்டக் களத்துக்கு அழைத்துவந்துவிட்டன டாஸ்மாக் கடைகள். ஊருக்குள் அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி கடந்த சில மாதங்களாகத் தமிழகம் முழுவதும் பெண்கள் பல்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். கையில் குழந்தையோடு முழக்கங்களைச் சொல்லியபடியும், மதுவுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடியும் சில இடங்களில் போராட்டம் நடந்தது. இன்னும் சில இடங்களில் பெண்கள் அதிரடியாகக் களத்தில் இறங்கி, டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். தமிழகம் முழுவதும் நடைபெற்ற மதுவுக்கு எதிரான போராட்டக் காட்சிகளில் சில இங்கே உங்கள் பார்வைக்கு…