ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் சார்ந்து இருக்கக்கூடிய துறைகளில் பல சாதனைகளை எட்டிப்பிடிப்பதற்கான திறன்களோடு இருப்பார்கள். சோர்ந்து இருக்கும் பலருக்கு தங்களுடைய செயல்கள் மூலம் நம்பிக்கை அளிப்பவர்களாக இருப்பவர்கள் பெண்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கை, போராட்டமும் சகிப்புத்தன்மையும் கொண்டது. அவை பெரும்பாலும் கவனிக்கப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் உள்ளன. பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பத்துக்காக வருடத்தின் அனைத்து நாட்களும் ஓயாமல் உழைக்கிறார்கள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்தான் அதைச் செய்கிறார்கள்.
எந்த இடத்திலும் தனித்துவத்துடன் இருக்கும் பெண்களை ஈஸ்டர்ன் அமைப்பு பாராட்டவிருக்கிறது. தனக்கு ஊக்கமளித்த பெண்களை கவுரவப்படுத்த நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த விழாவுக்கு அவர்களுடைய பெயரைப் பரிந்துரைக்கலாம். நீங்கள் பரிந்துரைக்க நினைக்கும் பெண்கள் உங்கள் தாயாக, மனைவியாக, குழந்தையாக, தங்கையாக, தோழியாக, அலுவலக மேல் அதிகாரியாக, உடன் பணிபுரியும் தோழியாக, ஆசிரியராக, அண்டை வீட்டுப் பெண்ணாக இப்படி யாராகவும் இருக்கலாம்.
நீங்கள் பரிந்துரை செய்பவர் குறித்து 60 வார்த்தைகளுக்கு மிகாமல் அவர்களை பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவை. அத்துடன் அவர்களின் புகைப்படத்தை இணைத்து >www.bhoomika.eastern.in என்ற இணையதளத்தில் பதிவேற்றலாம். அல்லது >www.facebook.com/EasternBhoomika, >www.twitter.com/EasternBhoomika ஆகியவற்றிலும் பதிவிடலாம். தேர்வு செய்யப்படும் பெண்கள் மகளிர் தினத்தன்று கவுரவிக்கப்படுவார்கள். இந்நிகழ்ச்சி ஒரே நேரத்தில் லக்னோ, புனே, பெங்களூரு, சென்னை, கொச்சி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.