பெண் இன்று

சர்வம் சக்தி மயம்

செய்திப்பிரிவு

பெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது ஒரு வெப் டிவி! உலக மகளிர் தினத்தையொட்டி ஆரம்பிக்கப்பட்ட ஸ்த்ரீ டிவியில் (v) பெண்களுக்கான நிக்ழச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகின்றன.

பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் இந்த நிகழ்ச்சிகள் கைகொடுக்கின்றன. அறிவியல், ஆன்மிகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தொடர்ந்து பெண்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதையும், சமுதாயத்தில் பெண்களுக்கென்று ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பதையும் தங்கள் இலக்காகக் கொண்டு செயல்படுகிறார்கள் ஸ்த்ரீ டிவி குழுவினர்.

SCROLL FOR NEXT