பெண் இன்று

சேனல் சிப்ஸ்: செல்லச் சண்டை

மகராசன் மோகன்

ஆதித்யா தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘டாடி எனக்கொரு டவுட்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவந்த செந்தில் தற்போது அகல்யாவுடன் இணைந்து நடத்திவரும் ‘மாமோய் எங்க இருக்கீங்க?’ என்ற நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு.

“கணவன், மனைவிக்குள்ள நடக்கும் சின்னச் சின்ன சண்டைகளை காமெடி கலந்து கொடுக்கணும்னு தொடங்கினதுதான் இந்த நிகழ்ச்சி. எழுபத்தைந்து எபிசோடுகளைக் கடந்து நூறாவது வாரத்தை நோக்கி நகர்ந்துக்கிட்டிருக்கோம். ‘டாடி எனக்கொரு டவுட்’ நிகழ்ச்சி, குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டது. பெரியவங்களும் ரசிக்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி இருக்கணும்னு யோசிச்சோம். அதுல உதிச்சதுதான் இது. இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

“அகல்யாவும் நீங்களும் சேர்ந்து வழங்குற இந்த நிகழ்ச்சி மாதிரி காமெடி சம்பவங்களை எழுதுங்க, படமா எடுப்போம்னு ஒரு தயாரிப்பு நிறுவனத்துல இருந்து கேட்டிருக்காங்க. அந்த அளவுக்கு நிகழ்ச்சி ஹிட் ஆனதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!’’ என்கிறார் செந்தில்.

கனவு நிஜமாகிறது!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ‘லேடீஸ் ஸ்பெஷல்’, ‘24 ஃபிரேம்ஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் சங்கீதா, சின்னத்திரை தொடர்களைத் தயாரிக்கும் ‘சரிகம’ கம்பெனி தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

“கடந்த மூணு, நாலு மாதங்களாகவே நினைக்கிற விஷயங்கள் எல்லாம் பாசிடிவாவே நடந்துக்கிட்டிருக்கு. சன் மியூசிக்ல பிஸியா ஓடிக்கிட்டிருக்கும்போது பிடித்த பிசினஸ்ல இறங்கணும்னு திட்டம் வைச்சிருந்தேன். அருமையான சுவையில் உணவுகளைக் கொடுக்கற ஒரு ரெஸ்டாரென்ட் திறக்கணுங்கிறது என்னோட சின்ன வயசு கனவு. அதுவும் சமீபத்துல நடந்திருச்சு. நிகழ்ச்சிகளை வழங்கும்போது அதுக்கு இடையில வர்ற விளம்பரங்கள்ல வந்தால் இன்னும் ஜாலியா இருக்குமேன்னு நினைப்பேன். வரிசையாக விளம்பர படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ஜெயம் ரவியோட ‘டிக் டிக் டிக்’ படத்துல ஒரு ரோல் நடிச்சு முடிச்ச கையோடு, இப்போ ‘நீயும் நானும்’படத்துல ஒரு முக்கியமான ரோல்லயும் நடிச்சாச்சு. இதே மாதிரி இன்னும் பல வருஷத்துக்கு பிஸியா இருக்கணும். அதுதான் என் ஆசை!’’ என்கிறார் சங்கீதா.

SCROLL FOR NEXT