பெண் இன்று

சேனல் சிப்ஸ்: இடைவேளைக்குப் பிறகு

மகராசன் மோகன்

விஜய் தொலைக்காட்சியின் ‘ஆண்டாள் அழகர்’ தொட ருக்குப் பிறகு ஒரு சிறு இடைவேளை எடுத்துக் கொண்டு கணவருடன் பெங்களூருவில் வசித்துவந்த கல்யாணி மீண்டும் சின்னத்திரை, சினிமாவில் வலம் வரவிருக்கிறார்.

“ஆமாங்க, கேமராவுக்கு முன்னாடி வந்து ஒன்பது மாதம் ஆச்சு. நானே விரும்பி இந்த இடைவேளையை எடுத்துக்கிட்டேன். திருமணம் ஆனதும்கூட ஷுட்டிங், டப்பிங்னு பிஸியா ஓடிக்கிட்டே இருந்தேன். நான் ஃப்ரீயா இருந்தா என் கணவர் ரோஹித் பிஸி. அவர் வீட்ல இருக்கும்போது எனக்கு ஷுட்டிங்னு ரெண்டு பேரும் ஓடிக்கிட்டே இருந்தோம். அதனால்தான் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கிட்டேன். ரெண்டு பேரும் நிறைய இடங்களுக்குப் போனோம். இந்த இடைவேளையில் சில சேனல்கள்ல இருந்து வாய்ப்புகள் வந்துக்கிட்டே இருக்கு. சீக்கிரமே ஒரு நல்ல சீரியல்ல நாயகியா முகம் காட்டப்போறேன். அதோடு சினிமாவில் நடிக்கும் திட்டமும் இருக்கு” என்கிறார் கல்யாணி.

குழந்தைகளுக்காக

‘இளவரசி’, ‘ரோமாபுரி பாண்டியன்’ ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்த வைஜெயந்தி, ராஜ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘அட்டகாசம்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

“ஒரு பிளாட்ல வசிக்கிற குட்டிப் பசங்களோட அட்டகாசத்தை மையமாக வைத்து வளர்ந்துவரும் தொடர் இது. ‘அஞ்சலி’ திரைப்படம் எப்படி சின்னக் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்ததோ, அதே மாதிரி இந்தத் தொடர் இன்றைக்கு உள்ள குழந்தைகளை மையமாக வைத்துச் சுழலும். இதில் அபார்ட்மெண்ட் செகரட்டரியோட மனைவியாக நடிக்கிறேன். சன் டிவியில் ‘அபூர்வ ராகங்கள்’ தொடர் ஆடிஷனும் முடிச்சாச்சு. தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் முகம் காட்டுவேன்!’’ என்கிறார் வைஜெயந்தி.

SCROLL FOR NEXT