பெண் இன்று

கைமணம்: சேனை மிக்ஸர்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தோல் சீவி நறுக்கிய சேனைத் துண்டுகள் – ஒரு கப்

ஊறவைத்த கொண்டைக் கடலை - ஒரு கப்

வேர்க்கடலை - ஒரு கரண்டி

தேங்காய்ச் சில்லு - அரை கப்

மஞ்சள் பொடி - சிறிதளவு

உப்பு, நெய் - தேவையான அளவு

முந்திரிப் பருப்பு - ஒரு கரண்டி

நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு கரண்டி

எப்படிச் செய்வது?

சேனைத் துண்டுகளை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். அதில் மஞ்சள் பொடி சேர்த்துப் பிசையுங்கள். வேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்குங்கள். சிறிது எண்ணெயில் பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரி, கறிவேப்பிலையைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் சேனைத் துண்டுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வறுத்தெடுங்கள். வாணலியில் உள்ள எண்ணெயின் அளவைக் குறைத்து அதில் கொண்டைக்கடலையைப் போட்டு மேலே தட்டு போட்டு மூடிவையுங்கள். அது படபடவென்று வெடித்து ஓசை அடங்கியவுடன் அதனுடன் வறுத்த சேனை, தேங்காய்ப் பல், முந்திரி, வேர்க்கடலை, உப்பு, காரப் பொடி உருக்கிய நெய், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்!

- என். விசாலாட்சி, மும்பை.

SCROLL FOR NEXT