பெண் இன்று

போகிற போக்கில்: பள்ளியில் கற்றது பலன் கொடுக்குது!

லக்‌ஷிதா

குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்களைத் தன் விற்பனைக்கான ஆதாரமாகப் பயன்படுத்தி ஜெயித்தவர் உஷா சுவாமிநாதன். திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டைச் சேர்ந்த இவர், குழந்தைகளுக்கான கம்பளி ஆடைகளைப் பின்னுவதில் செய்வதில் தேர்ந்தவர். தொப்பி, கையுறை, காலுறை என்று குழந்தைக்குத் தேவையான சகலத்தையும் கம்பளியில் செய்கிறார். ஆடைகளுக்கு ஏற்ற நிறங்களில் ஹேண்ட்பேக், பர்ஸ் போன்றவற்றை க்ரோஷேவில் செய்து ஆன்லைனிலும், ஃபேஸ்புக் மூலமும் விற்பனை செய்கிறார்.

“இது பள்ளிப் பருவத்திலேயே கற்ற கலை. திருமணத்துக்குப் பிறகு இவற்றை மறந்தே போனேன். குழந்தைகள் செட்டில் ஆனதும், ஓய்வு நேரத்தில் என்ன செய்வது என யோசித்தபோது என் கணவர்தான் கைவினைக் கலையை நினைவூட்டினார். முதலில் கொஞ்சம் தடுமாறினேன். குழந்தைகள் ஆடையைப் பின்னும்போது அளவு தவறிவிடும். யுடியூப் வீடியோக்களைப் பார்த்து அதைச் சரிசெய்தேன். ஒரு மாதத்தில் 150 குழந்தைகள் செட் செய்வேன்” என்கிறார் உஷா.

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் நிறைய விலங்குகளின் உருவத்தில் கம்பளி ஆடைகளை வடிவமைக்கச் சொல்லியிருக்கிறார். அவற்றைச் செய்து அனுப்பியதும், தன் குழந்தைக்கு ஒவ்வொரு ஆடையையும் அணிவித்து, ஒளிப்படம் எடுத்து அனுப்பி நன்றி தெரிவித்திருக்கிறார்.

“இதையே தொடர்ந்து செய்யலாம்னு எனக்கும் தோணுச்சு. ஆரம்பத்தில் நண்பர்களுக்கு செய்து கொடுத்தேன். அப்படித்தான் இது தொழிலா மாறுச்சு. இப்போ எனக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் ஆர்டர் கிடைக்குது” என்கிறார் உஷா சுவாமிநாதன்.

SCROLL FOR NEXT