பெண் இன்று

‘இரண்டன்றி வேறல்ல’ - ட்ரம்ப் நிலைப்பாடு எத்தகையது?

ப்ரதிமா

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப் தன் முதல் உரையில் நிறம், பாலினம் குறித்துப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. “பொது, தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இனம், பாலினம்ரீதியான சமூகக் கொள்கைகளைப் புகுத்த நினைக்கும் அரசாங்கக் கொள்கைகளை நான் முடிவுக்குக் கொண்டுவருவேன்.

இனி அமெரிக்க அரசின் கொள்கைப்படி ஆண், பெண் என்கிற இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்” என்று தன் உரையில் டிரம்ப் குறிப்பிட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன் காலத்தில் உருவாக்கப்பட்ட கொள்கைகளைச் ‘சட்ட விரோதமானவை, தீவிரமானவை’ எனக் குறிப்பிட்ட டிரம்ப், பாலினரீதியான ஒடுக்கு முறையைத் தடுக்கும் கொள்கையை ரத்து செய்தார்.

ஆண், பெண் தவிர பல பாலினங்கள் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அறிவியலுக்கு எதிரான டிரம்பின் நிலைப்பாடு சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விவாதப் பொருளானது.

SCROLL FOR NEXT