பெண் இன்று

பெண்கள் 360: முதல் பெண் அதிபர்

ப்ரதிமா

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறார் கிளாடியா ஷீன்பாம்.

200 ஆண்டுகால நவீன மெக்ஸிகோவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இவர் எழுதியிருக்கிறார். பதவியேற்ற பிறகு தன் முதல் நாடாளுமன்ற உரையைத் தொடங்கிய கிளாடியா, “இது பெண்களின் காலம். நம் அழகிய நாட்டின் விதியை வடிவமைக்கும் பொறுப்பைப் பெண்கள் ஏற்றிருக்கிறார்கள்” என்றார். “கல்வியும் ஆரோக்கியமும் மெக்ஸிகோ மக்களின் உரிமை. சலுகைகளும் வணிகப் பொருள்களும் அல்ல” எனக் குறிப்பிட்ட அவர், தான் பயணிக்க விருக்கும் பாதையைச் சுட்டிக் காட்டினார். ஆய்வறிஞரான கிளாடியா, ஆற்றல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். ஆற்றல், நீடித்த வளர்ச்சி, சுற்றுச்சூழல் போன்றவை குறித்துக் கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியிருக்கிறார். ஏற்கெனவே மெக்ஸிகோ நகர மன்றத் தலைவராக இருந்ததன் மூலம் அந்தப் பதவியை வகித்த முதல் பெண் என்கிற வரலாற்றையும் இவர் படைத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT