படம்: மெட்டா ஏஐ
நாடு முழுவதும் திருமண சீசன் இது. ஒருவித பரபரப்பையும் கொண்டாட்டத்தின் சலசலப்பையும் பரவலாகப் பார்க்க முடிகிறது. தொடர்ச்சியான விழாக்கள், முடிவில்லாத பயணம், நள்ளிரவுவரை விழித்திருப்பது என, இந்த காலம் உங்கள் சருமத்திற்கு கவனம் தேவைப்படும் நேரமாக இருக்கும். அதேநேரத்தில் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மணப்பெண்கள், விருந்தினர்கள் என இரண்டு தரப்பினரும் பளபளப்பான தோற்றத்தை விரும்புகிறார்கள். இதனால் சரும பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றுடன் தூக்கமும் மிக முக்கியம். ஒப்பனை, மெஹந்தி, கொண்டாட்டம் ஆகியவற்றுக்கு மத்தியில், கொஞ்சம் கூடுதல் கவனத்தையும், ஆக்ஸிஜனேற்றிகளின் பாதுகாப்பையும் உங்கள் சருமம் பெற்றாக வேண்டும்.
சருமத்தின் பாதுகாப்பு ஆக்ஸிஜனேற்றிகள்:
ஒரு நல்ல நேரத்தை அனுபவிப்பதற்கான ரகசியம் இரண்டுக்குமான சமநிலை, அதாவது கொண்டாட்டம் தீவிரமாக இருக்கும்போதே கவனத்துடன் தேர்வுகளை மேற்கொள்வது. ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவுகள் உடல் நெருக்கடிக்கு எதிராக இயற்கையின் கண்ணுக்கு தெரியாத கேடயமாக செயல்படுகின்றன. ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தின் முன்னணி வீரர்களாகும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு, புற ஊதா கதிர்கள், ஆரோக்கியமற்ற உணவுகளிலிருந்து பெறப்படும் மூலக்கூறுகளை இவை சமநிலைப்படுத்துகின்றன. இல்லையென்றால் உடலின் கொலாஜன், எலாஸ்டின் ஆகியவற்றை உடைத்து, தொய்வு, சீரற்ற தன்மையை சருமத்தில் இந்த மூலக்கூறுகள் ஏற்படுத்திவிடும். ஆக்சிஜனேற்றிகளில் வைட்டமின் இ தனித்து நிற்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், சருமத்துக்கு ஆழமாக ஊட்டமளித்து, உள்ளிருந்து ஈரப்பதத்தையும் தருகிறது.
வைட்டமின் இ எனும் ரகசிய ஆயுதம்:
உண்மையில், வைட்டமின் இ என்பது டோகோபெரோல் (tocopherol), டோகோட்ரியெனாலை (tocotrienol) கொண்ட சேர்மங்களின் குடும்பமாகும். டோகோபெரோல் பல அழகு கிரீம்களில் காணப்படும் ஒன்றாக இருந்தாலும், டோகோட்ரியெனால்கள் பெரிதாக அறியப்படாத அதேநேரம் சக்திவாய்ந்த அதன் மற்றொரு வகை ஆகும். அவை ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுவதில் அறுபது மடங்கு வலிமையானவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவை அழற்சியைத் தணிக்கின்றன. புற ஊதா கதிர் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன, முன்கூட்டியே தெரியும் முதுமை அறிகுறிகளை மெதுவாக்குகின்றன. மன அழுத்தம் மிகுந்த திருமண காலத்தில் இவை அவசியத் தேவை.
டோகோட்ரியெனால் இயற்கையாக வளமாக உள்ள பொருட்களில் ஒன்று பாமாயில். இது சமையல் பயன்பாட்டைத் தாண்டி, சருமப் பராமரிப்பில் அதிகளவில் மதிக்கப்படும் ஒரு மூலப்பொருளாக உள்ளது. ஓலிக், லினோலிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்களுடன், இந்த எண்ணெய் உடலில் ஈரப்பதத்தை அதிகரித்து சரும வறட்சியை நீக்குகிறது, அதேநேரத்தில் அதன் கரோட்டினாய்டுகள் எரிச்சலைத் தணிக்கின்றன. அத்துடன் சூரிய வெப்பத்துக்கு எதிராக பாதுகாப்பையும் அவை வழங்கக்கூடும். எனவே, இது மாய்ஸ்சுரைசர், சீரம் ஆகியவற்றுடன் ஆரோக்கியத்துடன் சுவையை சேர்க்க வடிவமைக்கப்பட்ட உணவு வகைகளில் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை.
திருமண நாளில் ஒளிர்வதற்கு...
சரும வறட்சி, தோல் வெடிப்புகள், சோர்வு போன்ற திருமண கால சருமப் பிரச்சினைகளை நிர்வகிக்க சருமத்துக்கு ஈரப்பதம் அவசியம். தண்ணீர், தேங்காய் தண்ணீர், மூலிகை தேநீர் குடிப்பது சரும நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கும் அதே வேளையில், உடல் நச்சுகளை வெளியேற்றவும் உதவுகின்றன. அதேநேரம் ஆரோக்கியமான, சமச்சீர் எண்ணெய்களும் சமமான அளவில் முக்கியம். அவை சரும மீள்தன்மை, ஈரப்பதம், பழுதுபார்ப்புக்கு உதவுகின்றன. அவை திருமண உணவு வகைகளில் அவசியம். வெண்ணெய், வால்நட், பாமாயில் போன்றவற்றுடன் சமச்சீர் ஃபேட்டி ஆசிட்ஸ் கொண்ட எண்ணெய்கள் போன்றவை சருமத்தை மிருதுவாக வைத்திருக்கின்றன.
அதேநேரத்தில் கருப்பு மிளகுடன் சேர்க்கப்பட்ட மஞ்சள் பாரம்பரிய அழற்சி எதிர்ப்பு ஊக்கத்தை தருகிறது. தயிர் போன்ற நொதித்த உணவு வகைகளை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது சரும பளபளப்புடன் நேரடித் தொடர்புள்ளது. அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகளுடன் வரும் இனிப்புகள் உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்கின்றன. விருந்துகளில் இனிப்புகள் மற்றும் வறுக்கப்பட்ட பொருட்களைப் போலவே சமநிலை மற்றும் உடற்பயிற்சி இந்த காலத்தில் மிகவும் தேவையான விஷயங்கள் ஆகும்.
விஷயம் ரொம்ப எளிமையானது: திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி, இனிய ஞாபகங்களுக்காகவே, குற்ற உணர்வு தேவையில்லை. எனவே, உங்கள் விருப்பத்தை கவனமான தேர்வுகளுடன் இணைத்து, வைட்டமின் இ தரும் நன்மையை, குறிப்பாக டோகோட்ரியெனாலை பெறுவதன் மூலம், கொண்டாட்டங்களை முழுமையாக அனுபவிக்கும் அதே வேளையில், உங்கள் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற நெருக்கடியிலிருந்தும் பாதுகாக்கலாம்.
ஒளிரும் சருமம் என்பது கட்டுப்பாடுகளால் கிடைப்பது அல்ல, அது ஊட்டச்சத்தை சார்ந்தது. முழுமையாகக் கொண்டாடுங்கள், புத்திசாலித்தனமாக உடலை கவனித்துக் கொள்ளுங்கள், இந்த திருமண சீசனை போலவே உங்கள் சருமமும் பிரகாசிக்கட்டும்.
- டாக்டர் மாளவிகா அசோக் (BHMS, FFAC, PGDCC, DSAL, DMT) - ஓர் அழகியல் மருத்துவர்.