இன்றைய காலத்தில் உலகை அச்சுறுத்தும் நோயாகப் புற்றுநோய் உள்ளது. ஆனால், புற்றுநோயைவிட இதய நோய்களால் இறப்பவர்கள் உலகில் அதிகம். அப்படியென்றால், இதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள் வதற்கான வழி என்ன?:
சத்தான உணவு, உடற்பயிற்சி, உறக்கம் மற்றும் மன அழுத்தமின்றி எப்போதும் கலகலப்பாக இருப்பதே ஆரோக்கியமான ‘லப்டப்’க்கு அடிப்படை.
மனம்விட்டுச் சிரிக்கும்போது ரத்தக் குழாய்களின் இறுக்கம் தளர்வதால், உடலில் சீரான ரத்த ஓட்டம் நடைபெற ஏதுவாகிறது.
இசை கேட்பது, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவதும் இதயத்துக்கு நன்மை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், செயற்கை பானங்கள், அதிகக் கொழுப்பு உணவுகள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது விளையாட்டு, நடனம், உடற்பயிற்சி ஆகியவற்றை உடல் வியர்க்கும் அளவுக்கு மேற்கொள்வது இதயப் பாதிப்புகள் நெருங்காதவண்ணம் உடலைப் பாதுகாக்கும்.