M.Cycle/monthly cycle |
பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக ‘ஆப்’ இது. மாதவிடாயைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் இதில் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எப்போது மாதவிடாய் வரும் என்று முன்கூட்டியே நினைவுபடுத்தும். குழந்தை பெற முயற்சிப்பவர்களுக்குக் கருமுட்டை உருவாகும் நாளையும் இது கணக்கிட்டுச் சொல்கிறது. மாதவிடாய்ச் சுழற்சி அடிப்படையில் கருத்தரிக்க உகந்த நாட்கள் கணிக்கப்படுகின்றன. இந்த நாட்களைக் கணக்கில் கொண்டு தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கவும் முடியும்.
இவை அனைத்தையும் தெளிவாக நமக்குப் புரிய வைக்கவும் நினைவுபடுத்தவும் ஒரு பிரத்யேக நாட்காட்டி இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதவிடாய்க் காலகட்டத்தைக் குறிக்கும் நாட்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும், மாதவிடாய் வரப்போகும் நாட்களைச் சாம்பல் நிறத்திலும், கருவுறுதலுக்கு உகந்த நாட்களை நீல நிறத்திலும் இந்த ‘ஆப்’ தெளிவாகக் கணக்கிட்டு வழிகாட்டுகிறது. பெண்களின் மொபைல் ஃபோன்களில் அவசியம் இருக்க வேண்டிய உபயோகமான ‘ஆப்’ இது.
- விஜயஷாலினி