நாவல் கரோனா வைரஸால் விளைவிக்கப்படும் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலை முதல் அலையைவிட வேகமாகப் பரவக்கூடியதாகவும் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினரை அதிக எண்ணிக்கையில் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளது. இந்த 18-45 வயதுக் குழுவினர் தொற்றுப் பெருங்கடத்துநர் (Super Spreader) என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஏன் உருவானது இரண்டாம் அலை?
பொதுமக்களின் கவனக்குறைவும், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல், தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றை மக்கள் முறையாகப் பின்பற்றாததும் கரோனா பெருந்தொற்று மீண்டும் தீவிரமடைந்ததற்கான முதன்மைக் காரணங்கள்.
கோவிட்-19 இன் புதிய அறிகுறிகள்:
இவற்றில் ஏதேனும் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினையோ இருந்தால், அவற்றை கோவிட்-19 அறிகுறிகளாகக் கருத வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
எளிதில் தொற்றக்கூடியது
ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டிருந்தால் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவர் மூலம் தொற்றுப் பரவுதற்குச் சாத்தியமுள்ளது. அந்த அளவுக்கு இந்த வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவக்கூடியது. முந்தைய நாவல் கரோனா வைரஸ் ஏ.சி.ஈ II ஏற்பிகளுடன் இணைந்துகொண்டது. இப்போது பரவிவரும் வேற்றுருவ கரோனா வைரஸ் கூர்புரதத்துடன் இணைந்துகொள்கிறது. இதனால், உடலுக்குள் அதன் நகர்வு, ஏற்பிகள் இல்லாமலே மிகவும் எளிதாகியிருக்கிறது.
சுவாசிக்கும் ஆற்றலை மட்டுப்படுத்தக்கூடிய இந்தத் தொற்று, ஏற்கெனவே நோய் கண்டவருக்கு அருகில் இருப்பதால் பரவும்.
தொடர்பு நேரம்: கரோனா தொற்று ஏற்பட்ட நபருடன் 15 நிமிடத்துக்கு மேல் தொடர்பில் இருந்தவர் தொற்றைப் பெறுவதற்கான சாத்தியம் மிக அதிகம்.
அறிகுறிகள்
# 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல்.
# 10 mg/l -க்கு மேல் சி-ரியாக்டிவ் புரதம் (CRP) வேகமாக அதிகரித்துக்கொண்டே இருத்தல்.
# மூன்றாம் நாள் இருமல்
# ஆறு நிமிட நடை சோதனையில் எஸ்.பி.ஓ2 (ஆக்சிஜன் செறிவு SpO2) 5 சதவீதம் குறைவது நிமோனியா இருப்பதைக் குறிக்கிறது.
# முதல்நாள் அறிகுறி தோன்றியதிலிருந்து ஐந்தாம் நாள் மிக முக்கியமானது.
அறிகுறிகள் தென்படத் தொடங்கியதிலிருந்து மூன்றாம் நாள் முதல் ஆறாம் நாள் வரை ஆறு நிமிட நடை பரிசோதனை மிகவும் பயனுள்ளது. நடக்கும்போது ஆக்ஸிஜன் அளவு 95க்குக் கீழே சென்றால், அவருக்கு நிமோனியா இருப்பதாக பொருள். அது அவசர சிகிச்சை தேவைப்படும் நிலை.
எப்போது குறையும்?
# முகக் கவசம் அணியாமல் இருத்தல், கூட்டம் கூடுதல் உள்ளிட்ட கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான செயல்பாடுகளை துளியும் அனுமதிக்கக் கூடாது.
# கோவிட் கட்டுப்பாடுகள் 100 சதவீதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.
# தடுப்பூசி போடும் பணி நிறைவடைய வேண்டும்.
மக்களில் 70 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு சமூக நோய்த் தடுப்பாற்றல் கிடைத்துவிடும். அது எட்டப்படாதவரை இதுபோன்ற புதிய நோய்த்தொற்று அலைகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கும். எனவே, சமூக நோய்த் தடுப்பாற்றல் நிலையை அடையும்வரை கட்டுப்பாடுகளை நாமே தளர்த்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக முகக் கவசம் அணிவதைத் தவிர்க்கவே கூடாது.
நன்றி: ஆர்செலர் மிட்டல்/நிப்பான் ஸ்டீல்