நலம் வாழ

அர்த்த சக்ராசனம்: (அரைச் சக்கர நிலை)

யோகன்

செய்யும் முறை

l கால்களை நேராக வைத்து நிமிர்ந்து நில்லுங்கள்.

l கைகளை இடுப்பின் மீது வையுங்கள்.

l மூச்சை உள்ளே இழுத்தபடி, பின்புறம் வளையுங்கள்

l வளைந்த பிறகு மூச்சை மெதுவாக விட்டுவிட்டு, அந்த நிலையிலேயே சிறிது நேரம் இருக்கவும்.

l வளைந்த நிலையிலேயே மூச்சை மெல்ல இழுத்துவிடலாம்.

l மூச்சை வெளியேற்றியபடி மேலே வரவும்.

கவனிக்க வேண்டியவை

l மூச்சை அடக்கக் கூடாது.

l வளையும்போது முதுகின் அடிப்பாகத்தில் வளைய வேண்டும்.

l இடுப்பை முன்னால் கொண்டுவரக் கூடாது.

l முழங்கால்களை மடக்கக் கூடாது. இடுப்பை முன்னால் கொண்டுவராமல் செய்வதும் முதுகின் அடிப்பாகத்தை வளைப்பதும் ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம். தினசரி சிறிது நேரம் பயிற்சி செய்துவந்தால் எளிதாகிவிடும். வளைந்த நிலையிலேயே 20 விநாடிகள் வரை நிற்கலாம். இதுவும் முதலில் கஷ்டமாக இருக்கும். பயிற்சி செய்யச் செய்ய வசப்படும்.

பலன்கள்

l அடிவயிற்றுப் பகுதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும். ஜீரணம் எளிதாகும்.

l இடுப்பு, தொடைப் பகுதிகளில் ஊளைச் சதை இருந்தால் குறையும்.

l முதுகின் மேற்புறத்தில் வரும் வலியைப் போக்க உதவும்.

l கழுத்து வலிக்கு, இது நல்ல நிவாரணி.

l நுரையீரலின் திறன் கூடும். மூச்சு சீராகும்.

l மூச்சுப் பிடிப்பின் காரணமாக வரும் வலி தீரும்.

l கழுத்து, தோள்பட்டைகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறிக்கும்.

l அடி முதுகின் இயக்கத்தைச் சீராக்கும்.

l இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும்.

l சினைப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்தும். மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கும்.

எச்சரிக்கை

l இடுப்பு, முதுகில் பெரிய பிரச்சினை கொண்டவர்களும் உயர் ரத்தஅழுத்தம், மூளை தொடர்பான வியாதிகள் கொண்டவர்களும் இதைச் செய்ய வேண்டாம்.

l பெப்டிக் அல்சர், குடலிறக்க நோய் கொண்டவர்கள் இதைத் தவிர்க்கவும்.

| கர்ப்பிணிப் பெண்கள் இதைச் செய்ய வேண்டாம்.

SCROLL FOR NEXT